alanganallur Jallikattu..additional time to kallaikkattu
அலங்காநல்லூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்க அதிக காளைகள் வந்துள்ளதால் ஒரு மணி நேரம் கூடுதலாக ஜல்லிக்கட்டு நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து முடிந்தது.இதையடுத்து உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணி காப்போம் என்றும், விளையாட்டில் சீறி வரும் காளைகளுக்கும் எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறிதும் தீங்கு நேராமல் அரசு விதிமுறையை பின்பற்றி விளையாடுவோம் என்றும் உறுதி மொழிகிறோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலாவதாக வந்த முனியாண்டி கோயில் காளைக்கு சிவப்பு கம்பள பரிசு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் திறந்துவிடப்பட்டன, சீறிப்பய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக அடக்கினர். ஒரு சில காளைகளை வீரர்க்ள் பிடிக்க முடியாமல் திண்டாடினர்.

நேற்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது 500 க்கும் மேற்பட்ட காளைகள் நேரமின்மை காரணமாக அவிழ்த்து விடப்படவில்லை. இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் கூடுதலாக ஒடீ மணி நேரம் ஜல்லிக்கட்டு நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்பாட் உத்தவிட்டார்.
ஜல்லிக்கட்டை யொட்டி 1000 த்திற்கும் மேற்பட்ட காளைகள் அலங்காநல்லூர் வந்துள்ளன. முன்னதாக 1241 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. இதற்காக 10 மருத்துவ குழுக்கள் உடல் பரிசோதனை செய்துள்ளனர். அதே போன்று காளைகளை பரிசோதிக்க 12 கால்நடை மருத்துவ குழுக்களும் உள்ளனர்.பாதுகாப்பிற்காக 2ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
