திமுக தலைவர் கருணாநிதி மறைந்த மூன்றாவது நாளே அவரது சமாதிக்கு சென்ற அழகிரி, திமுக தொண்டர்க்ள தனது பக்கம்தான் உள்ளனர் என்றும் தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கொளுத்திப் போட்டார்.

ஆனால் அது குறித்து சட்டை செய்யாத ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களை கூட்டி தன்னை திமுகவின் தலைவராக எந்தவித எதிர்ப்பும் இன்றி முடிசூட்டிக் கொண்டார். இது அழகிரிக்கு ஆத்திரத்தைக் கொடுக்க நேற்று முனதினம் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார்.

ஆனால் அது பிசுபிசுத்துப் போனது. எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.இது திமுகவின் ஸ்டாலின் தரப்புக்கு தெம்பைக் கொடுத்துள்ளது. ஆனால் அழகிரியை நம்பி பின்னால் வந்த 10  ஆயிரம் பேர் கதி என்ன என்பது இப்போது கேள்விக்குரியதாக உள்ளது.

அழகிரி நல்வர்தான் என்றாலும் கரணாநிதி உயிருடன் இருக்கும்போதே மூவ் பண்ணி கட்சியில் இணைந்திருக்க வேண்டும் என்று புலம்பும் அவரது ஆதரவாளர்கள், தற்போது திமுகவுக்கு எதிராக அவர் செயல்பட முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.

பாஜக அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகளில் அவர் இணையவும் முடியாது. தனிக்கட்சி தொடங்கினாலும் அதை நடத்திச் செல்லும் அளவுக்கு அவருக்கு பக்குவம் இருக்கிறதா எனவும் தொண்டர்கள் கேள்வி எழுப்பினர்.

திமுக எதிர்ப்பு பேரணி என்று சவால்விட்டு அவர் நடத்திய கூத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. அதே நேரத்தில் வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அழகிரி வேலை பார்த்தால் அதை அவரது ஆதரவாளர்களே விரும்ப மாட்டார்கள் என்றுதான் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

அழகிரி கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்த்திருக்க வேண்டும் என்றே அவரது ஆதரவாளர்கள் புலம்பிர்  தள்ளுகின்றனர். தற்போது 10 ஆயிரம் தொண்டர்கள் கதி என்ன என்பதே கேள்வியாகியுள்ளது.