சன்னியாசியாக நினைத்தேன் பிரதமராக வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்தது இல்லை என்று பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அக்‌ஷய் குமார் நடத்திய நேர்காணலில் பிரதமர் மோடி பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

 டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில்  மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்தார். அதில்,   நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. எனக்கு கோபம் வராததை பார்த்து  மக்கள் ஆச்சர்யபடுகிறார்கள். கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்ளவில்லை. எனக்கு கோபம் வரும் அதை நான் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.  எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு வரை எனக்கு வங்கி கணக்கு கிடையாது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறுவயதிலேயே நான் எனது தாயை விட்டு பிரிந்து வந்து விட்டேன். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.  அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது எனக்கு எப்போதுமே அளவு கடந்த நட்பு உள்ளது. 

குறிப்பாக  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு ஒவ்வொரு வருடமும் குர்தாவை பரிசாக வழங்குவார். சோசியல் மீடியாவில் வரும் மீம்ஸ்-களை மிகவும் ரசிப்பேன். இந்தமாதிரியான மீம்ஸுகள் மூலம் சாதாரண மனிதனின் படைப்பாற்றல் வெளிப்படுகிறது. 

கடந்த சிலமாதங்களாக நான் நகைச்சுவையாக பேசுவதை தவிர்த்து வருகிறேன். ஏனெனில் அதனை ஊடகங்கள் தங்களில் TRP க்காக தவறாக சித்தரிக்கப்படுகின்றன இவ்வாறு நேர்காணலில் கூறியுள்ளார்.