akilesh yadav losing in up

வாக்கு எண்ணிக்கையில் உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவது அக்கட்சி தொண்டர்களை கவலை அடையச் செய்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 72 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. 

சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவின் சற்றே நிலை கவலைக்கிடமாக உள்ளது. அசம்ஹார் மாவட்டத்தில் உள்ள முபாரக்புர் தொகுதியில் போட்டியிட்ட அவர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை விட பின்னடைவில் உள்ளார்.

தந்தை முலாயம்சிங்கை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி அரசியலை அசால்டாக கையாண்ட அகிலேஷ் யாதவ். தோல்விப் பாதையில் பயணித்து வருவது அக்கட்சித் தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.