அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடிய அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன

இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முன்பே நன்றி தெரிவித்து விட்டார் பிரஷாந்த் கிஷோர். ஜனதா தளம் கட்சியில் துணைத் தலைவராக இருந்த கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.  அவரை கொரோனா வைரஸ் என அக்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆர்வக்கோளாறு எனவும் கடுப்படித்து வருகின்றனர். ஜெயிக்கிற குதிரையில் பந்தயம் கட்டுவதுதான் அவரது ஸ்டைல்.

மோடிக்காக 2014ம் ஆண்டு வேலை செய்தவர், அவருடைய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை சார்ந்தவர், அந்த கட்சிக்காக வேலை பார்த்தவர் என்றெல்லாம் பிரஷாந்த் கிஷோரின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது முடிவுகள் வந்து கொண்டிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக களத்தில் உள்ள ஆம் ஆத்மிக்குத் தான் பிரஷாந்த் கிஷோர் பணியாற்றியுள்ளார்.

பிரஷாந்த் கிஷோர் ஒரு வணிக நிறுவனத்தின் முதலாளி. அவருடைய நிறுவனத்திற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால், அவர் தேர்ந்தெடுக்கும் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஆராய்ந்து யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை கணித்து அந்தக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றினால் தான் அவருக்கு லாபம். இல்லையென்றால் என்னதான் யுத்திகளைப் பயன்படுத்தினாலும் அது பிரஷாந்த் கிஷோருக்கும் இழப்பாகவே முடியும். இதுதான் அவரது தாரக மந்திரம்.

 

இப்போது அடுத்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமாரக்க முடிவு செய்து தூபம் போட்டு வருகிறார் பிரஷாந்த் கிஷோர். அவர் மூலம்  மிக செழிப்பான மத்திய அமைச்சர் பதவியை பிடித்து விடலாம் என திட்டமிட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க மக்களால் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அதுவும் திடர்ச்சியாக மூன்றாவது முறை முதல்வராக தேர்ந்தெர்டுக்கப்பட்டுள்ள ஒரு முதல்வரின் தோல் மீது கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பதை பிரஷாந்த் கிஷோரின்  திமிரின் உச்சமாகவே டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.