ரசிகர்கள் பிஜேபியில் சேர்ந்தார்கள் என்பதற்க்காக அல்ல, அவரது ரசிகர்கள் அஜித்தின் பெயரை சொல்லி எந்த காட்சியிலும் சேர விரும்புவதில்லை. அப்படி பெறுபவர்கள் அஜித் ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை. 'மோடி சாதனைகளை அஜீத் ரசிகர்கள் பரப்பணும்' ஒரு வார்த்தை விட்டதால் வந்த வினை இப்போது அறிக்கை ரூபத்தில் அஜித் யார்? அஜித் அவரது ரசிகர்களை யாருக்காகவும் அடிபணிய விட்டதில்லை, தன்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தியதில்லை என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது.

"என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் ரசிகர் இயக்கங்களை கலைத்தேன், மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன். நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன் என ரசிகர்கள் மேல் வைத்திருக்கும் அன்பு"  

அடுத்ததாக தான் ரசிகர்களிடம் எதிர் பார்ப்பதை, நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். 

எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம், ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்ற்மையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவைதான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. ‘வாழு வாழ விடு’”

 நேற்று தான் தமிழிசை அவர்கள் சொன்னாங்க நடிகர்களில் அஜித் மிகவும் நல்ல மனிதர்ன்னு, அடுத்த நாளே அதை செய்துகாட்டிய அஜித் மிகவும் நல்லவர் தான் , இனி இதை உணர்ந்தது ஒவ்வொரு ரசிகரும் செயல்படுவார்கள். அஜித்தையும் அவரது ரசிகர்களையும் வைத்து அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு அஜித் கொடுத்த மரண அடி என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.