நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் தீர்மானமானவன். என் ரசிகர் இயக்கங்களை நான் கலைக்கவும் இந்த காரணமே பின்னணி, இந்த நேரத்தில் நான் தெளிவாக சொல்ல விரும்புவது, எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஆசை இல்லை, நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை, என் ரசிகர்கள் படிப்பு, பணி, சட்ட ஒழுங்கு, ஆரோக்கியத்தின் மேல் கவனம் வைக்க வேண்டும் என அறிக்கை விட்டு தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடைசியாக எனது அதிகபட்ச அரசியல் தொடர்பு ஒரு சராசரி இந்தியனாக வரிசையில் நின்று வாக்களிப்பதே'. என அறிக்கையில் ஹைலைட்டாய் சொன்னது அரசியல் தலைவர்களையே கவர்ந்துள்ளது. அஜித்தின் இந்த அதிரடியான அரசியல் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மஃப பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் அஜித்தை புகழ்ந்து கருத்து கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு மகன் போல இருந்தவர் நடிகர் அஜித்.  கட்சி கடந்து மிகப்பெரிய அன்பும் மரியாதையும் அஜித் மீது தமிழக மக்கள் வைத்துள்ளனர். கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டு தன்னுடைய கருத்தைத் திறம்பட சொன்னவர் அஜித் என புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார், "நடிகர் அஜித் தொழில் பக்தி உள்ளவர் தான்உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்; அஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது; திறந்த மனதோடு அஜித் தனது நிலையை கூறியிருக்கிறார்", மேலும் அவர் துணிச்சலோடு தன்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று அஜித் கூறியுள்ளார். அது பாராட்டக்கூறிய ஒன்று  என புகழ்ந்துள்ளார்.