‘தம்பி, எங்கள் புரட்சித் தலைவி அம்மா பெற்றெடுக்காத பிள்ளைதான் அஜித். அதனால நீங்களெல்லாம் அம்மாவின் கரத்தை வலுப்படுத்தவேண்டும்’
’எனக்கு மன்றமே வேண்டாம். பிடிச்சிருந்தால் என் படத்தை பாருங்க. இல்லேன்னா பார்க்க வேண்டாம்.’ என்று தன் ரசிகர் மன்றத்தை கூட அடியோடு கலைத்து, அகில இந்திய அளவில் அதிசயம் பண்ணினார் நடிகர் அஜித் குமார். ஆனால் அவரை அரசியல் விவகாரத்தில் இழுத்துவிட்டு தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் செய்யும் அக்கப்போருக்கு ஒரு அளவு தளவே இல்லாமல் போயினு இருக்குது.
அதாவது அஜித்தை எப்போதுமே தங்களின் ஆதரவாளராக நினைப்பது அ.தி.மு.க.வின் மனோபாவம். தேர்தல் வரும்போதெலாம் ரொம்ப உரிமையாக அவரது ரசிகர்களிடம் ‘தம்பி, எங்கள் புரட்சித் தலைவி அம்மா பெற்றெடுக்காத பிள்ளைதான் அஜித். அதனால நீங்களெல்லாம் அம்மாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்கு தாருங்கள்.’ என்று பொன்னாடை போர்த்தி விடாத குறையாக பிரசாரம் செய்து வாக்குகளை வளைப்பார்கள். இது அஜித்தின் கவனம் வரை பல முறை சென்றும், எந்த ரியாக்ஷனுமில்லை. அதனால் ‘தலயே அ.தி.மு.க.வை விரும்புறார்’ என்று சொல்லிக் கொண்டு அன்று அக்கட்சியை பெரிதாய் ஆதரித்தனர் அவரது ரசிகர் மன்றத்தினர்.

ஆனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அஜித் மற்றும் அ.தி.மு.க.வுக்கு இடையில் ஒரு இடைவெளி விழுந்தது. ஆனால் இப்போது தனது வலிமை படத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியன்று ரிலீஸ் செய்கிறார் அஜித். தயாரிப்பாளர் போனி கபூர் ரிலீஸ் செய்ய மூன்று, நான்கு தேதிகளை கொடுத்த நிலையில் இதை அஜித் தேர்வு செய்ததுதான் அ.தி.மு.க.வை குஷியாக்கி ‘அஜித்குமார் மறுபடியும் எங்களை ஆதரிக்க துவங்கிட்டார். அதனால் உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க’ என்று அவரது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்து, உள்ளே இழுக்க துவங்கிவிட்டனர் அ.தி.மு.க.வினர்.
இதைப் பார்த்து செம்ம கடுப்பில் இருக்கிறது தி.மு.க. இந்நிலையில்தான் ஆளுங்கட்சியின் இணையதள அணி ஒரு பதிவை போட்டு பட்டையை கிளப்பிவருகிறார்கள். அதில் ‘அஜித் பாபாவின் தீவிர பக்தர். பாபாவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. அதனால் அஜித் தன் படங்களை எப்போதும் வியாழனில்தான் ரிலீஸ் செய்வார். வரும் பிப்ரவரி 24ம் தேதி வியாழக்கிழமை. அதனால்தான் அந்த தேதியை தேர்வு செய்திருக்கிறார். அந்த நாள், ஜெயலலிதாவின் பிறந்த நாள்தான் ஆனால் இரண்டும் இணைவது யதேச்சையாக நடந்தது. அஜித் அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஜெயலலிதாவின் பிறந்தநாள் காரணமில்லை, பாபாதான் காரணம்.
இந்த உண்மையை மறைத்துவிட்டு, அஜித் எங்களை ஆதரிக்கிறார், எங்களுக்கு ஓட்டுப் போட சிக்னல் தந்துட்டார்! அப்படின்னு ஏ.கே.வின் ரசிகர்களை ஏமாத்த பார்க்காதீங்கன்னா, அப்படி ஏமாற அவங்க என்ன லூசுளா? இல்லவே இல்லை. அவங்க ரொம்ப தெளிவானவங்க.” என்று விட்டு விளாசியுள்ளனர். இது பெரிய அளவில் ஒர்க் – அவுட் ஆகிறது.
