திரெளபதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் அந்த ட்ரெய்லரில் குறிப்பிட்ட சாதியினர் நாடகக் காதல் செய்து பெண்களை மிரட்டி பணம் பறிப்பதாக வசனங்களும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய அளவை விட ஆதரவும் அதிகமாக கிடைத்தது. 

இந்தப்படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் நடித்துள்ளார். இதனால் ஜாதி படத்தில் அஜித் மைத்துனர் எப்படி நடிக்கலாம் என ஒரு தரப்பினர் முண்டு தட்டினர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் உள்ள அஜித் ரசிகர்கள் அஜித்தின் மைத்துனர் நடித்ததை வரவேற்றனர். இந்நிலையில், அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி அஜித்தை சந்தித்து பேசியதாகவும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. '’'திரௌபதி' இயக்குநர் மோகனை அழைத்து பாராட்டினார் அஜித்’’ சில நேரங்களில் அஜீத்தின் நேர்மையான துணிவு என்னை பிரமிக்க வைக்கிறது என மோகன் கூறியதாக ஒரு பதிவு உலா வருகிறது. 

இதனை பார்த்த நெட்டிசன்கள், ’’ஹீரோ அஜித் மைத்துனராம். பாவம்! மைத்துனர் நடிச்சதுக்கு அவர் இமேஜையும் சேத்து நொறுக்குவாங்களேனு நெனச்சாதான்...

’’சாத்தியமா ஒன்னு இப்போதான் புரிச்சது  அஜித் ஒரு சாதியினருக்கு சப்போர்ட் செய்கிற ஆளுன்னு காட்டினார்கள். அதோட சாயல் தான் திரெளபதி படத்தில் அஜீத்தின் மச்சான் நடித்திருக்கிறார் போல. அஜித் மேல தப்பு இல்ல. அவரை சுற்றி இருக்கிறவர்கள் அவரை அப்படி ஆக்கிடுறாங்க.’’

 

நான் அஜித் ரசிகன் ஆனால் நானே சொல்வேன் அஜித் ரசிகர்களில்தான் சாதி வெறியர்கள் வன்மம் பிடித்தவர்கள் அதிகம் ஆனால் இந்த திரெளபதி குப்பைக்கு ஆதாரவாக விஜய் டிபி வைத்திருப்போர்(விஜய் ஆதரவாளர்கள் என்றே கூறலாம்) அதிக அளவில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது.