Asianet News TamilAsianet News Tamil

ரூ.749 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறும் தயாநிதியை கைது செய்யாதது ஏன்..? சிபிஐயை அதிர வைத்த நீதிமன்றம்..!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் 749 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக கூறும் சிபிஐ அதற்கு காரணமான தயாநிதி மாறனை மட்டும் கைது செய்யாதது ஏன் என்று டெல்லி நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.

aircel-maxis case...Why not arrest DMK MP dayanidhi maran
Author
Tamil Nadu, First Published Sep 6, 2019, 10:26 AM IST

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் 749 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக கூறும் சிபிஐ அதற்கு காரணமான தயாநிதி மாறனை மட்டும் கைது செய்யாதது ஏன் என்று டெல்லி நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது பேசிய நீதிபதி, இந்த வழக்கே மிகவும் தாமதமான ஒன்று என்று கூறினார். விசாரணை அமைப்புகள் மிகவும் தாமதமாக இருந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார். விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்பதில் தான் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த வழக்கில் குறியாக உள்ளனர். விசாரணையை முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை போல. ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் வெறும் ஒரு  கோடி ரூபாய் அளவிற்கு தான் பலன் அடைந்திருப்பதாக விசாரணை அமைப்புகள் கூறுகின்றன. aircel-maxis case...Why not arrest DMK MP dayanidhi maran

ஆனால், இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய முயற்சி நடைபெறுகிறது. அதே சமயம் தயாநிதி மாறன் சுமார் 749 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாக இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் தற்போது வரை தயாநிதி மாறனை கைது செய்யவில்லை. ஏன் இப்படி விசாரணை அமைப்புகள் நடந்து கொள்கின்றன? aircel-maxis case...Why not arrest DMK MP dayanidhi maran

ஒரே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு இடையே பாகுபாடு காட்டப்படுகிறது. இது சட்டத்திற்கு எதிரானது. இவ்வாறு கூறிய நீதிபதி ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios