கைது செய்யப்பட்ட ரதீஸிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எயிட்ஸ் நோயாளி என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ரதீஸ் (22) என்ற வாலிபரை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ரதீஷ் எய்ட்ஸ் நோயாளி என்பது தெரிய வந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் ( வயது 22 ) ஆட்டோ ஓட்டுனரான இவர் அப்பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பது போல் நடித்து அவரை ஆசை வார்த்தைகள் கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சொன்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை பல ஆசை வார்த்தைகள் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவருக்கு கடுமையான பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோ டிரைவரையும் அவர் அழைத்துச் சென்ற மாணவியையும் தேடிவந்தனர். 

இந்நிலையில் வெளியீர் செல்ல நாகர்கோவிலில் ஒரு பகுதியில் நின்றுகொண்டு இருந்த இருவரையும் பிடித்த போலீசார் ஆட்டோ டிரைவர் ரதீசை பிடித்து விசாரணை மேற்கொண்டதோடு அவருடன் இருந்த மாணவியையும் மீட்டனர். மேலும் ரதீஷ் மீது கடத்தல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ரதீஸிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எயிட்ஸ் நோயாளி என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.