ஈரோடு இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரியே இல்லையா..? திமுகவை விளாசும் கே.பி.முனுசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி. அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதற்கேற்ற களத்தை அதிமுக நண்பர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக வெற்றி உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பனிமனை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேர்தல் பணிக்குழு தலைவருமான செங்கோட்டையன் அவர்கள் பேசுகையில், காலத்தை வென்றவன் நீ, காவியத்தை வென்றவன் நீ, என்ற பாடலை குறிக்கோள் காட்டி இந்த இடைத்தேர்தலில் வெற்றி காண்போம் என்றார். புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரின் வழியில் சிறப்பாக நான்கரை ஆண்டு காலம் ஆட்சி நடத்தி அனைத்து துறைகளிலும் தமிழகத்தை ஒளிரச் செய்த எடப்பாடியார் தலைமையில் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறினார். தென்னகத்திற்கு அரசு என அவர் பெயரிலேயே வெற்றியை வைத்திருக்கின்றார்.
திமுக சரிவு; அதிமுக.? ஈரோடு இடைத்தேர்தல் முடிவை மட்டும் பாருங்க - அண்ணாமலை போடும் புது கணக்கு !!
50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என ஆளும் கட்சியினர் சொல்லுகின்றனர். உண்மையில் அதிமுகவை பொறுத்தவரையில் கண்ணுக்கெட்டிய தூரம் எந்த கட்சியும் இல்லை. கிளை கழகச் செயலாளராக இருந்து படிப்படியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிச்சாமி. ஈரோடு கிழக்கு தொகுதி. அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதற்கேற்ற களத்தை அதிமுக நண்பர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். ஈரோடு அதிமுகவில் திறமை மிக்க தொண்டர்களும் நிர்வாகிகளும் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். இங்கே எதிர்ப்பதற்கு ஆள் இல்லையென தெரிவித்தார்.
ஈரோடு அதிமுகவின் கோட்டை
இதனை தொடர்ந்து அதிமுக கிழக்கு தொகுதி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேசுகையில் திண்டுக்கல் தேர்தல் புரட்சி தலைவர் ,மதுரை தேர்தல் புரட்சி தலைவி ஆகியோருக்கு வெற்றியாக இருந்ததோ அதே போல ஈரோடு கிழக்கு அதிமுகவின் இலக்கு என்ற முறையில் எனக்கு வாய்ப்பழித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த அதிமுக ஆட்சியில் தான் அதிகப்படியான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.திமுக ஆட்சியில் தற்போது வரை திட்டங்களும் கொண்டு வரப்பட வில்லை என விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
மத்திய பட்ஜெட் எப்படி இருக்கிறது? ஒரே வரியில் நச்சுன்னு சொன்ன டிடிவி. தினகரன்..!