தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டை போல் அதிமுக சிதறிவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டை போல் அதிமுக சிதறிவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட நாளை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவங்குகிறேன். அமைச்சரின் வாகனத்தை சோதனை செய்த அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் அதிகாரத்தை கையில் எடுத்த பிறகும் ஆளுங்கட்சியின் துஷ்பிரயோகம் நடக்கிறது. அமமுகவை தொடங்கும்போதே அதிகமுவை மீட்போம் என்பது தான் எங்களின் முழக்கமாக இருந்தது. இதை ஜனநாயக முறைப்படி செய்துகாட்டுவோம்.

எடப்பாடி அரசு கொரோனா காலத்திலும் அனைத்து துறைகளிலும் முறைகேடுகளை செய்துள்ளது. குறிப்பாக முதல்வரின் கையில் உள்ள நெடுஞ்சாலை துறையில் அதிகளவு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல்கள் குறித்து எனது பிரச்சாரத்தின்போது மக்களிடம் கூறுவேன்.

ஆட்சியில் இருக்கும் வரை அதிமுக இருக்கும். அதன்பிறகு நெல்லிக்காய் மூட்டைபோல சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர். எனவே அதிமுகவை மீட்போம். தேர்தலுக்கு பிறகு சசிகலா மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்துவோம். ஆளும் கட்சி பண மூட்டையை நம்பி இந்த தேர்தலில் நின்றால் என்ன நடக்கும் என்பது இந்த தேர்தலில் தெரியவரும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
