முக்கிய கட்சியின் தலைமை நிலையத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வைரலாக ஓடிக் கொண்டிருருக்கும் விவகாரம், சக எம்.எல்.ஏ. ஒருவருக்கும், நடிகை ஒருவருக்கும் இடையில் மூண்டுள்ள நட்பு நெருப்பு, காட்டுத் தீயாக பரவி, விரவி பற்றி எரிவது பற்றித்தான். 

தலைநகரை சேர்ந்த அந்த எம்.எல்.ஏ.வின் ஸ்பெஷாலிட்டியே குங்குமபொட்டு தான். காய்ந்து கிடக்கும் கட்சிக்காரர்கள் சில பதவிகளை பெற்று ஓரளவு காசு சேர்ந்து, கன்னம் பளபளன்னு மெருகு ஏறி தேஜஸ் ஆனதும் தானாக தோழிகளை தேடுவார்கள். இவரும் அப்படித்தான். ஆனால் சாதாரண தோழிகளை தேடமாட்டார், எப்போதுமே நட்சத்திர தோழிகளைத்தான் தேடுவார். அந்த வகையில் ஏற்கனவே ஒரு கிளாமர் கிளியும் இவரும் ஜோடியாக சுற்றிய கதையை ஊரே சொல்லி  சிரித்தது. 

இப்போதோ அண்ணனுக்கு புது அண்ணி கிடைச்சாச்சு. இவரும் நட்சத்திரம் தான். வித்தியாச ஹீரோவின் பத்தினியாய் இருந்து பின் பிரிந்தவர். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் சீரியல் ஹீரோ ஒருவருடன் இவரது நட்பை வைத்து தமிழ்நாடே பேசியது, பிறகு மறந்தது. சில காலங்கள் சீன் அவுட்டான இந்த அம்மணி இப்போது பொட்டுவைத்த எம்.எல்.ஏ.வின் நட்பின் மூலமாக மீண்டும் சீனுக்கு வந்துள்ளார். 

கோயில் குளமென்று அடிக்கடி யாத்திரை போகும் இந்த ஜோடி சமீபத்தில் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு தீம் பார்க் சென்று பைக் போட்டில் ஏறி, இறுக்க அணைச்சபடி தண்ணீரில் சீறிப்பாய்ந்தார்களாம். பஞ்சாயத்தே இதில்தான் துவங்கியிருக்கிறது. அதாவது, இருட்டிய பிறகு அந்த பைக் சேவையை யாருக்கும் வழங்காதாம் நிர்வாகம். ஆனால் ச.ம.உ.வோ தனது செல்வாக்கை சொல்லி, இரவில் பைக்கை எடுத்திருக்கிறார். 

ஏக தயக்கத்துக்குப் பிறகு போட்டை கையில் கொடுத்த தீம்பார்க் ஊழியர் ‘சார், இந்த அம்மா வேற ரொம்ப குண்டா இருக்காங்க. பார்த்து ஓட்டுங்க, நைட் டைம்ல நீங்க தண்ணீர்ல சாய்ஞ்சுட்டா கூட எங்களால கண்டுபிடிக்க முடியாது!’என்றாராம். அதுக்கு எம்.எல்.ஏ.வோ ‘உங்க அண்ணியோட (நடிகைதான்) அழகே அந்த குண்டுதான் டா! நான் பார்த்துக்குறேன் டா கண்ணா.’ என்றபடி பைக்கை ஸ்டார்ட் பண்ண, அம்மணி இறுக்கியணைச்சு உட்கார, இருளில் சீறிப்பாய்ந்ததாம் பைக். ஒரு மணி நேரம் ரவுண்டு முடிச்சுவிட்டு வந்து கரையேறியதும் அந்த ஊழியரின் கையில் கத்தையாக திணித்தாராம் கரன்ஸியை. இந்த வி.ஐ.பி. அண்ணன் - அண்ணியின் வரவை மீண்டும் எதிர்நோக்கி இருக்கிறதாம் தீம் பார்க் தரப்பு.