கடந்த இரண்டு வருடங்களாக தமிழக அரசியலில் வான்டட் ஆக ஆஜரைப் போட்டு வாயைக் கொடுத்து வசவு வாங்கிக் கட்டுவதும், சில நேரங்களில் வாயார புகழப்படுவதுமாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்டோரின் ஹாட் ஜோடியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர், தற்போது தமிழக அரசியலில் செய்யும் அகா ஜுகா வேலைகள் பெரிய அலப்பரைகளாக மாறிப்போயுள்ளன. அந்த வகையில் சமீபத்தில் ஆளுங்கட்சி வி.ஐ.பி. ஒருவரின் மகனை அவர் சுற்றலில் விட்டுள்ளதுதான் ஹைலைட்டே. 

அதாவது சில நாட்களுக்கு முன் கஸ்தூரி “மதுரை தொகுதியின் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக வேட்பாளரான ராஜ் சத்யன் ரொம்ப்ப்ப்ப நல்லவர். எனவே என்னை அக்கட்சியின் பிரசார பீரங்கியாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.” என்று போகிற போக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை தட்டிவிட்டார். இது சத்யனின் காதுகளை சென்றடைய, மனிதர் ‘கஸ்தூரி மேடமே என்னை புகழ்ந்து, எனக்காக பிரசாரம் செய்றாங்களா?’ என்று கிறுகிறுத்து சொக்கிவிட்டாராம். 
 
உடனே உஷாரான அவரது அப்பாவும் சிட்டிங் எம்.எல்.ஏ.வும், மாஜி மேயருமான ராஜன் செல்லப்பா  ‘மகனே அந்தம்மா கிண்டலுக்கு அப்படி பேசியிருக்குது. தன்னை பி.ஜே.பி.யின் சங்கின்னும், தி.மு.க.வின் சொம்புன்னும் கூட தன்னைத் தானே கமெண்ட் அடிச்சிருக்குது அதே பேட்டியில. அதனால நீ என்னமோ கஸ்தூரியே நமக்கு கலக்கலா சர்டிஃபிகேட் கொடுத்துடுச்சுன்னு கவுந்துறாதப்பே!’மகனுக்கு தண்ணீர் தெளிச்சுவிட்டு ஆசுவாசப்படுத்தி இருக்கிறார். 

உடனே சிரித்த ராஜ் சத்யன் ‘யப்பா அவ்ளோ புரிதல் இல்லாதவனா உங்க மயன்! நான் தெளிவா இருக்கம்பா’ என்று எஸ்கேப் ஆனாராம். இருந்தாலும் ராஜ் சத்யனின் நண்பர்கள் “மாப்ள, இந்த கஸ்தூரி கொஞ்சம் ஓவராதான் அரசியல் அலப்பறை பண்ணுறாப்ல. அமைதிப்படை படத்துல அல்வா வாங்குன லேடி, இப்ப ரியல் அரசியல்ல பல பேருக்கு அல்வா கொடுக்க நினைக்குது. நாமதான் சூதானமா இருக்கணும்டியேய்!” என்று அலர்ட் ஆறுமுகமாகி இருக்கிறார்கள்.