Asianet News TamilAsianet News Tamil

போங்காட்டம் காட்டும் தேமுதிக... கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக அப்செட்..!

அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெறுவதாக இருந்த அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 

AIADMK upset in alliance talks with dmdk
Author
Tamil Nadu, First Published Mar 1, 2021, 12:57 PM IST

அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெறுவதாக இருந்த அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக மீது தேமுதிக அதிருப்தி - சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிக அதிருப்தியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக நிர்வாகிகள் தவிர்த்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. AIADMK upset in alliance talks with dmdk

இரண்டாவது நாளாக தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் அமைச்சர் தங்கமணி இல்லத்திற்கு வருகை தந்து இருந்த போதும் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக பாமகவுக்கு இணையாக 23 தொகுதிகளைக் கேட்பதாகத் தகவல். நேற்றிரவு அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்துக்கே நேரடியாகச் சென்று சந்தித்தனர்.

AIADMK upset in alliance talks with dmdk

தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா வெளியூர் சென்றிருந்ததால் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios