அதிமுக அணிகள் இணைப்பில் கூடிய விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக அரசியல் கலத்தில் அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளும் இணைவது குறித்து வெளியாகி வருகிறது 

எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு, ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று, பின்னர் இணைப்பு குறித்து தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது.

சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமது நிர்வாகிகளுடன் நேற்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். 

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ், இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், அணிகள் இணைப்பு விவகாரத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், இணைப்பு குறித்து ஓரிரு தினங்களில் நல்ல
முடிவு எட்டப்படும் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அணிகள் இணைப்பு குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று கூறினார்.

அணிகள் இணைப்பு நீங்கள் எண்ணியபடியே நல்ல முன்னேற்றம் அடையும் என்றும் கூடிய விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.