Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினுக்கு செம்ம ஷாக்கிங்... கொங்கு மண்டலத்தை கொத்தாக தூக்க போட்ட பிளானை தவிடு பொடி ஆக்கும் அதிமுக...!

திமுகவுடன் தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

AIADMK talks with DMK alliance party.. MK Stalin Shock
Author
Tamil Nadu, First Published Mar 9, 2021, 4:28 PM IST

திமுகவுடன் தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதேபோல காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. 

AIADMK talks with DMK alliance party.. MK Stalin Shock

இந்நிலையில், திமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக அங்கம் வகித்துவரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியோடு மட்டும் இன்னும் திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 6 தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வருகிறது. ஆனால், 3 தொகுதிகள் மட்டுமே திமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே திமுக -கொமதேக இடையே இழுபறி நீடித்து வருகிறது. 

AIADMK talks with DMK alliance party.. MK Stalin Shock

இதனிடையே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வியால் தான் ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. ஆகையால், இந்த முறை அந்த தவறு நடந்துவிடக்கூடாது என்பதால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios