வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்பது நகைப்புக்குரியது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்பது நகைப்புக்குரியது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மண்ணடியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பிடம் கட்டும் பணியை அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தயாநிதி மாறன் துவக்கி வைத்தார். ராஜா அண்ணாமலை மன்றத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மளிகை பொருட்கள், 200 ரூபாயை தயாநிதி மாறன் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு ‌உடன் இருந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என பாஜக மாநிலத் துணைத்தலைவர் வி.பி துரைசாமி கூறியிருப்பது நகைப்புக்குரியது என தயாநிதி மாறன் கூறினார். அதிமுக ஒன்றுமே இல்லையென்று அவர்களே தெரிவித்துள்ளார்கள். இதன் பிறகாவது பாஜக குறித்து அதிமுக புரிந்து கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்றார்.

வி.பி.துரைசாமி குறித்த கேள்விக்கு எல்லாம் பதிலளிக்க விருப்பமில்லை, திமுக மத நல்லிணக்கதிற்கானது, மதவெறியை தூண்டி அரசியல் செய்யும் இயக்கம் பாஜக, அதற்கு, தமிழகத்தில் இடமில்லை என கூறியுள்ளார்.