மூன்றாவது முறையும் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி.. அடித்து கூறும் என்.ஆர் தனபாலன்.
அதேபோன்று நாட்கள் நெருங்க நெருங்க முக்கிய கட்சிகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது, ஏற்கனவே காலை முதல் இரவு 10 மணி வரை நேரக் கட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது நாட்கள் குறையக் குறைய முக்கிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேரத்தை குறைத்துள்ளது
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர் என்.ஆர். தனபாலன் பிரச்சாரத்தை நேற்று அப்பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அவர், சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் மிக குறைவாகவே இருக்கிறது, இருப்பினும் தமிழக முதலமைச்சர் எடுத்துரைத்த தேர்தல் அறிக்கையை முற்றிலுமாக மக்கள் மனதில் திரும்பத் திரும்ப எடுத்து சென்று கொண்டுதான் இருக்கிறோம்.
அதேபோன்று நாட்கள் நெருங்க நெருங்க முக்கிய கட்சிகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது, ஏற்கனவே காலை முதல் இரவு 10 மணி வரை நேரக் கட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது நாட்கள் குறையக் குறைய முக்கிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேரத்தை குறைத்துள்ளது.பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரை முழுவதுமாக நாங்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்துவிட்டோம்.
ஒரு சிலர் காலையில் மக்களை சந்தித்துவிட்டு அதோடு மாலை தான் சந்திக்கிறார்கள். ஆனால் நாங்கள் வெயில் என்றும்கூட பாராமல் நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம். அதே போன்று ஒரு சில இடங்களில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது. அந்த இடங்களுக்கும் முற்றிலுமாக இன்னும் ஒரு சில நாட்களில் முடித்து விடுவோம். மூன்றாவது முறையும் ஆதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.