அதிமுக மாவட்டசெயலாளர்கள், தலைமை நிலைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு நன்றி சொல்லுதல் உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

அதிமுக மாவட்ட, தலைமை நிலைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, பிரதமரை வழிமொழிய அதிமுகவுக்கு வாய்ப்புக் கொடுத்த பாஜகவுக்கு நன்றி கூறி தீரமானம். உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனே தொடர்ங்கி மக்கள் மனங்களை வெல்ல சூளுரை.  தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி.  

மக்களவை தேர்தலிலும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களுக்கும், அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் மக்கள் நலப் பணியாற்ற உறுதி ஆகிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.