Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தனும்.! திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினரை மாற்றனும்!ஜெயக்குமார்

ஒரே கட்டமாக வாக்குப்பதிவை நடத்தனும், திமுக வுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும், வெளிமாநில அரசு ஊழியர்களையே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 

AIADMK requests Election Commission to change police officers who support DMK KAK
Author
First Published Feb 23, 2024, 1:04 PM IST

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் இன்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தியது. இதில் அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கலந்து கொண்டர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்யவில்லை என்றும், தகுதியுள்ள வாக்காளர் பெயர்களை சேர்க்காமலும், இறந்தவர்கள் பெயரை நீக்காமலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும், தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டெடுக்கப்பட்டு, கூடுதல் மத்திய காவல் படை நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும், 

AIADMK requests Election Commission to change police officers who support DMK KAK

காவல் துறை அதிகாரிகளை மாற்றனும்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆளும் கட்சிக்கு ஆதரவான காவல்துறையினர் செயல்படுவதகவும், துணை ராணுவ படை போலீசாரை தேர்தல் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம் என்ற அவர், சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பல வாக்குச்சாவடி மையங்கள் திமுகவினரால் கைப்பற்றப்பட்டு, கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டதை நினைவுபடுத்தி தங்களது கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையர்களிடம் முன் வைத்து உள்ளோம் என்றார்.  ஆளும் கட்சிக்கு காவல் துறையினர் துதிபாடி கொண்டிருப்பதால், அவர்களுக்கு பதிலாக துணை ராணுவ படையினரை நியமிக்க வேண்டும் என்றும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளையும் மாற்ற வேண்டும் என்றார். 

AIADMK requests Election Commission to change police officers who support DMK KAK

சிசிடிவி கேமரா பதிவு

மேலும், தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுபவர்கள், வெளி மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதையும், சிசிடிவி கேமராவை பொருத்தும் பணியை டெண்டர் எடுக்கும் விவகாரத்தில் வெளிப்படை தன்மையோடு டெண்டர் நடத்த வேண்டும் என்பதையும், திமுக சார்ந்தவர்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை டெண்டர் ஒதுக்கினால் தேர்தல் வெளிப்படையாக நடைபெற வாய்ப்பு இருக்காது என்பதை ஆதாரங்களுடன் குறிப்பிட்டதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போது.? சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் இன்று முக்கிய ஆலோசனை

Follow Us:
Download App:
  • android
  • ios