Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் உண்மையில் ஜெயித்தது அதிமுகதான், திமுக இல்ல... மாஜி அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உண்மையான தோல்வி திமுகவுக்குதான், அதிமுகவுக்கு அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
 

AIADMK really won the election, not DMK ... Action information said by the former minister ..!
Author
Madurai, First Published Jul 6, 2021, 9:09 PM IST

மதுரை திருமங்கலம் அருகே மதுரை மேற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மதுரை மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி, திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராகவும், விலாசத்தை இழந்த அமமுக முதல்வர் வேட்பாளரை களத்தில் நிறுத்தின. இதேபோல பல கட்சிகளும் முதல்வர் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார்கள்.AIADMK really won the election, not DMK ... Action information said by the former minister ..!
ஆனால், தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்களில் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிக வாக்குகளை பெற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைவிட அதிக வாக்குகளை பெற்றதும் எடப்பாடி பழனிசாமிதான். இதமூலம் உண்மையாகவே தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என்பது தெரிகிறது. இதேபோல சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 1,43,85,410 வாக்குகளை மக்கள் அள்ளி தந்தார்கள். திமுக 1,56,87,421 வாக்குகள் பெற்றது. இதன் வாக்கு வித்தியாசம் 3 சதவீதம்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், திமுக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட தற்போது குறைவான வாக்குகளைதான் பெற்றுள்ளது. இதை வைத்து பார்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் உண்மையான வெற்றி திமுகவுக்கு கிடையாது, அதிமுகவுக்குதான். AIADMK really won the election, not DMK ... Action information said by the former minister ..!
தற்போது திமுக அரசு, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து அதிமுக தொண்டர்கள் மீது பொய்வழக்கு போடுகிறார்கள். எதிர்க்கட்சியின் குரல்வளையை நசுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். நீங்கள் போடும் தாளங்கள் எல்லாமே தப்புத்தாளங்கள்தாக மாறிவிடும். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தில் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. அந்த நாணயம் செல்லாமல் போகாது. நீங்கள் ஆளும் கட்சியாக இருந்தால், நாங்கள் எதிர்க்கட்சி. நீங்கள் எதிர்க் கட்சியாக இருந்தால் நாங்கள் ஆளுங்கட்சி. இதை மாற்ற முடியாது. AIADMK really won the election, not DMK ... Action information said by the former minister ..!
அப்படித்தான் தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மக்கள் நம்மை வெறுதிருந்தால், புறக்கணித்திருந்தால் எப்படி இவ்வளவு பேர் இரட்டை இலைக்கு வாக்களித்திருப்பார்கள். பீகாரிலிருந்து வந்த பிரசாந்த் கிஷோரின் கோயபல்ஸ் பிரச்சாரத்தையும் தாண்டி அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது வரலாற்று சாதனை. அமமுக என்ற கட்சி உருவாகும்போதே ஆட்சியைப் பிடிப்போம் என்று இல்லாமல் அதிமுகவை அழிப்போம், இரட்டை இலையை முடக்குவோம், அதிமுகவை கைப்பற்றுவோம் என்று நினைத்தார்கள். உலகிலேயே ஒரு கட்சியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சி இன்று விலாசத்தை இழந்து நிற்கிறது” என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios