Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது..!

பாமக திமுக கூட்டணியிலா அல்லது அதிமுக கூட்டணியிலா என குழப்பம் இருந்த நிலையில் தற்போது சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டணி கூட்டணியை உறுதி செய்தனர். மேலும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக-அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

aiadmk pmk alliance
Author
Tamil Nadu, First Published Feb 19, 2019, 11:23 AM IST

பாமக திமுக கூட்டணியிலா அல்லது அதிமுக கூட்டணியிலா என குழப்பம் இருந்த நிலையில் தற்போது சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டணி கூட்டணியை உறுதி செய்தனர். மேலும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக-அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. aiadmk pmk alliance

டாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலை சந்திக்கவும், கூட்டணி அமைப்பதிலும் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளன. யார் யாருடன் இணைய போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தை பற்றிக்கொண்டுள்ளது. 
தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக தனது கூட்டணிக்கான வளையத்தை பெரிதாக்கி இருக்கிறது. முதல் கட்டமாக அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தேமுதிக, பாமக, தமாகா ஆகிய கட்சிகளுடன் அதிமுக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  aiadmk pmk alliance

கூட்டணிக்கான பேச்சுவார்த்தையுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் சேர்ந்தே நடந்து வருகிறது.  இந்தநிலையில், தி.மு.க.வுடனும் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மிக ரகசியமான முறையில் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதனை பொய்யாக்கும் விதத்தில் இன்று சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்  ஆகியோர் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பேச்சு நடத்துவதற்காக முன்னதாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கிரவுன் ஹோட்டலுக்கு வருகை தந்தனர்.  aiadmk pmk alliance

இதைத் தொடர்ந்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி,கே,மணி, மூர்த்தி  ஆகியோர் வருகை தந்தனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராதாசுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். ஓபிஎஸ் அன்புமணிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதனால் அதிமுக-பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும் அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இன்று சற்று நேரத்தில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை விவரம் சற்றுநேரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios