துணை முதலைச்சர் தற்போது, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது  இல்லத்தில் இருந்து  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன் தெரிவித்த பல்வேறு குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்...

துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறியது..

என்னால் ஆட்சி கவிழாது...! 

என்னால் எந்த காரணத்தாலும், இந்த ஆட்சி கவிழாது..... 

நேற்று இரவு புது பிரச்சனையை தாமாகவே சிந்தித்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார் தினகரன்.. தங்க தமிழ் செல்வன் மூலம் புதிய கதையை சொல்லி உள்ளார் தங்கத்தமிழ்செல்வன் 

நேற்று காலை திருபரங்குன்ற சட்ட மன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி நேற்று காலை கூட்டம்  நடைபெற்றது..

அதில் அனைத்து இந்திய கழக உருப்பினர்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் நேற்று தெளிவானது.. அதை பார்த்த உடன் தான் ஒரு விதமான குழப்பமான மனநிலைக்கு தினகரன் வந்துள்ளார் ...
 
கடந்த மூன்று  மாதங்களுக்கு முன்பாக "உங்களுக்கு 50 கோடி தருகிறேன் என்றும்... எங்கள் பக்கம் வந்து விடுங்கள் என  தான்  தினகரனிடம் கூறியதாக தினகரன் சொல்லி இருந்தார்...அதற்கு அவர் முடியாது என்று சொன்னதாகவும் கூறி இருந்தார்....இவை அனைத்தும் பொய்யானது.

இதற்கு அடுத்த படியாக, நான்கு தினத்திற்கு முன்பாக ஒபிஎஸ் பிஜேபி உடன் சேர்ந்துக்கொண்டு ஆட்சியை கலைத்து விட்டு தான் முதல்வராக ஆசை படுகிறேன் என தெரிவித்து இருந்தார்..

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்..தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை தான் நான் செய்து வருகிறேன் 
 
"நான் நினைந்த காரியம் நடக்கவில்லையே என்று அலைந்து திரிந்துக்கொண்டு இருக்கிறார்..
இருபது ரூபாய் நோட்டை கொண்டு எப்படி அவர் வெற்றி பெற்றார் என்பது தெரியும்...அந்த நோட்டைக் கொண்டு பெட்டி கடையில் கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள் என மக்கள் சொல்வதை கேட்க முடிகிறது...

நான் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.. எதற்காக..? அந்த குடும்பத்திடம் கட்சி ஆட்சி சென்று விட கூடாது என்பதற்காக தர்ம யுத்தம் செய்துக்கொண்டிருக்கிறேன்..
 
"என்னால் இந்த ஆட்சி கவிழாது"..!

எம்ஜிஆர் உருவாக்கிய இந்த கட்சியும் அம்மா வளர்த்து எடுத்த இந்த ஆட்சியையும் அந்த குடும்பத்திடம் சென்று விடக் கூடாது என தான்  இன்று வரை தர்மயுத்தம் செய்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.

என்னால் எந்த காரணத்தாலும், இந்த ஆட்சி கவிழாது என்று திட்ட வட்டமாக கூறி உள்ளார் பன்னீர்  செல்வம். தான் ஏற்கனவே மூன்று முறை முதல்வராக இருந்து உள்ளேன். எனக்கு அது போன்ற  ஈனத்தனமான ஆசை கிடையாது என கூறி உறுதிப்பட கூறி உள்ளார் துணை முதலவர் பன்னீர் செல்வம்.