Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பக்கத்தில் ஓபிஎஸ்க்கு இருக்கையா.? சீறும் அதிமுக.! சபாநாயகரை மீண்டும் சந்தித்த மாஜி அமைச்சர்கள்

தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையை ஓ.பன்னீர் செல்வத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளித்துள்ளனர். 

AIADMK opposes allocating the seat of Vice President of Opposition to OPS KAK
Author
First Published Sep 22, 2023, 11:22 AM IST

அதிமுக அதிகார மோதல்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பல்வேறு குழப்பங்கள் அதிமுகவில் நிலவி வருகிறது. அதிகாரப் போட்டி காரணமாக பல பிளவுகளாகவும் பிளவுபட்டது. அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது அதில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பட்டு வந்தனர். இந்த இரட்டை தலைமையால் மூன்று வருடம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த நிலையில்,2021ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் இரட்டை தலைமை தோல்வியை சந்தித்தது.

AIADMK opposes allocating the seat of Vice President of Opposition to OPS KAK

சட்டப்போராட்டத்தில் இபிஎஸ் வெற்றி

இதனை அடுத்து இரட்டை தலைமையே வேண்டாம், ஒற்றை தலைமையே வேண்டுமென அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். ஆனால் இதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியது. இருந்த போதும்பொதுக்குழு உறுப்பினர்கள் அதிக ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என  நீதிமன்றம் தெரிவித்தது. 

AIADMK opposes allocating the seat of Vice President of Opposition to OPS KAK

எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை

இதனால் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு ஆர்பி உதயகுமார் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் வழங்கப்பட்டுள்ள இருக்கை மாற்றி அமைக்க வேண்டும் என அதிமுக சார்பாக சபாநாயகரிடம் அறிவுறுத்தப்பட்டு கடிதமும் கொடுக்கப்பட்டது.  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இருக்கையை மாற்றி வழங்க முடியாது எனவும் இது தொடர்பாக அவையின் பரிசீலனை இருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

AIADMK opposes allocating the seat of Vice President of Opposition to OPS KAK

ஓபிஎஸ் இருக்கையை மாற்ற கோரிக்கை

இந்த சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 9ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்க கூடாது என்றும்,  இதே போல மனோஜ் பாண்டியன் வைத்தியலிங்கம் இருக்கையையும் மாற்றி அமைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கட்சித் துணை தலைவர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது முறையாக கடிதம் வழங்கியுள்ளோம்.

AIADMK opposes allocating the seat of Vice President of Opposition to OPS KAK

,சட்டபேரவை விதிமுறை அடிப்படையிலும் மரபு அடிப்படையிலும் எதிர்கட்சித்துணை தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமனம் செய்ய வேண்டும் சட்டப்பேரவையில் இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம்,இதுவரை பின்பற்றி வந்த மரபுகளை சபாநாயகர் பின்பற்றுவார் என நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பான மனு பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் தெரிவித்தார்.  இந்த பேரவை கூட்டத்திற்கு முன்பு இது தொடர்பான முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும் என்றும் எடுக்கும் முடிவை எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது.. நீதிமன்றம் படியேறிய இபிஎஸ்.. கோர்ட் அதிரடி.!


 

Follow Us:
Download App:
  • android
  • ios