AIADMK MP who greeted TTV Dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு எம்எல்ஏக்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில் வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவரது இல்லத்தில் சந்தித்தார். தினகரன் வீட்டுக்கு இன்று மாலை 5 மணி அளவில் சென்ற எம்.பி. செங்குட்டுவன், ஆர்.கே.நகரில் தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில் அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தினகரனுக்கு, செங்குட்டுவன் எம்.பி., வாழ்த்து கூறியுள்ள நிலையில், எடப்பாடி பக்கம் இருந்த அவர், அணி தாவியுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதால் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியை கைகழுவிவிட்டு விலகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது, எடப்பாடி அணியில் இருக்கும் பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் டிடிவி அணி பக்கம் வர இருப்பதாகவும் தெரிகிறது.

அதிமுகவை சேர்ந்த சிலர் ஆதரவாக கூறி வரும் நிலையில், செங்குட்டுவன் எம்.பி. சந்திப்பு அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முடிவின்போது தினகரன் வெற்றிபெற்றதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு, அதிமுகவில் இருந்து பலர் ஆதரவு தெரிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.