அதிமுகவினர் ஒன்றும் கோழைகள் கிடையாது. ரவீந்திரநாத் நினைத்திருந்தால் திருப்பி அடித்திருக்க முடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் கம்பத்தில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கம்பம் நோக்கி, வந்த எம்.பி ரவீந்திரநாத் குமார் காரை 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்தனர். நாடாளுமன்றதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததை கண்டிக்கும் விதமாக ரவீந்திரநாத் காரை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியும், கறுப்புக்கொடி காட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள், கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

இதையும் படிங்க;- சசிகலா ரிலீஸாக வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை... ஓபிஎஸை அலறவிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்;- தேனி மாவட்டம், கம்பத்தில் ரவீந்திரநாத் எம்.பி.யின் காரை மறித்து அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். வன்முறையால் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவில் உள்ளவர்கள் கோழைகள் கிடையாது. எம்.பி. நினைத்திருந்தால் கீழே இறங்கி அடித்திருக்க முடியும். 

இதையும் படிங்க;- பிளான் போட்டு கொடுத்த அமைச்சர்... எக்சிகியூடிவ் பண்ணிய பாஜக... அதிமுக கபட நாடகத்தை அரங்கேற்றிய வேல்முருகன்..!

மதரீதியான பிரச்சனைகள் வரக்கூடாது. நம்மால் ஒரு சண்டை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அமைதியாக இருந்தார். உனக்கு பிடிக்காத திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது என்று கருதினால், சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு காரை மறித்து அடிப்பது என்றால், அந்த வழியை நாங்களும் பின்பற்ற முடியும். அதிமுகவினர் வீரம் கொண்டு எழுந்தால் சிங்கமாக எழுவோம். நாங்கள் பயந்து ஓடும் ஆட்கள் கிடையாது. நேரம் வந்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.