மக்களுக்கு குடிநீர் கிடைக்காத போது பதவி எதற்கு எனவும் தமது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவை சபாநாயகரிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை 2 நாட்களில் அளிப்பேன் எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும், அவையை முடக்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும்  மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. 

உச்சநீதிமன்றம் கெடு விதித்த 6 வார காலமும் முடிவடைந்த நிலையிலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வில்லை. இதனால் தமிழக அரசியல் கட்சிகளும் மக்களும் விவசாயிகளும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 

மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக அதிமுக சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் கருப்பு கொடி போராட்டமும் அனைத்து கட்சி கூட்டமும் கூட்டப்பட உள்ளது. 

இதனிடையே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் எம்.பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தமிழக எம்.பிக்கள் தெரிவித்து வந்தனர். 

நேற்று முந்தினம் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என அவேசமாக பேசினார். 

ஆனால் அரசியல் கட்சிகள் அது கோழைத்தனம் என்றும் வேண்டுமென்றால் பதவியை எம்.பிக்கள் ராஜினாமா செய்து எதிர்ப்பை தெரிவிக்கட்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், மக்களுக்கு குடிநீர் கிடைக்காத போது பதவி எதற்கு எனவும் தமது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவை சபாநாயகரிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை 2 நாட்களில் அளிப்பேன் எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும், அவையை முடக்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.