Asianet News TamilAsianet News Tamil

அதிமுக- பாஜக மோதல்..! நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்..! காரணம் என்ன தெரியுமா.?

அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையலில், கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

AIADMK MLAs met Union Minister Nirmala Sitharaman KAK
Author
First Published Oct 3, 2023, 12:47 PM IST

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி கடந்த 4 வருடங்களாக நீடித்து வந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இதனை அதிமுக நிர்வாகிகள் வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.. இந்த நிலையில் அதிமுக தலைவர்களை சமாதானம் செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கியுள்ளது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று முன் தினம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனையடுத்து நேற்று இரவு கோவை வந்த நிர்மலா சீதாராமனை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

AIADMK MLAs met Union Minister Nirmala Sitharaman KAK

நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்

இதனையடுத்து இன்று கோவையில் நடைபெற்ற தூய்மைப்பணி நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டவர், தொடர்ந்து கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ கே செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தனது x தளத்தில் நிர்மலா சீதாராமன் பதிவிட்டு தன்னை அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்றதாக தெரிவித்துள்ளார்.

 

நிர்மலா சீதாராமனை சந்தித்து ஏன்.?

அதிமுக- பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ள நிலையில், மத்திய அரசு சார்பாக நடைபெற்ற நிகழ்வில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டது. அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கையில் மத்திய அரசு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையிலேயே கலந்து கொண்டதாக தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்

அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறோம்.. நல்ல முடிவு வரும்- வி.பி.துரைசாமி

Follow Us:
Download App:
  • android
  • ios