அதிமுக சாதனைகளையும், தமிழ் மாதங்களையும் வரிசைப்படுத்தி எம்.எல்.ஏ. ஆறுகுட்டி சட்டப்பேரவையில் பாடியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கவுண்டபாளையம் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தனது கோரிக்கை குறித்து பேசினார். அப்போது, அதிமுக அரசு செய்த சாதனைகளையும், தமிழ் மாதங்களையும் வரிசைப்படுத்தி அதனை கிராமிய பாடலாக பாடினார்.

அதிமுக சாதனைகளை நீண்ட நேரமாக எம்.எல்.ஏ. ஆறுகுட்டி பாடிக் கொண்டிருந்தார். இதனால் அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து, சபாநாயகர் தனபாலன், கோரிக்கைகளை மட்டும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். சபாநாயகர் கூறியதை அடுத்து, ஆறுகுட்டி எம்.எல்.ஏ. பாடுவதை நிறுத்தி விட்டு, தனது கோரிக்கைகளை தெரிவித்து விட்டு இருக்கையில் அமர்ந்தார்.