Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்... டென்ஷனில் முதல்வர் எடப்பாடி..!

கொலை முயற்சி வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. சத்யா மற்றும் அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AIADMK mla sathya...chennai high court
Author
Tamil Nadu, First Published May 14, 2019, 4:21 PM IST

கொலை முயற்சி வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. சத்யா மற்றும் அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பண்ருட்டி புதுப்பேட்டையை சேர்ந்த ஆர்.சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் பணி தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள நான் எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது, பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா, அவருடைய கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடியாட்களை வைத்து என் மீதும் எனது நண்பர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். AIADMK mla sathya...chennai high court

இந்த தாக்குதல் தொடர்பாக கடலூர் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் இந்த புகார் தொடர்பாக புதுப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லலை. இதனையடுத்து கடலூர் எஸ்பியிடம் புகார் கொடுத்தேன் அரசியல் செல்வாக்கின் காரணமாக எம்.எல்.ஏ. மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதையடுத்து, கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அதன் பின்னர் எனது புகார் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யா மற்றும் அவருடைய கணவர் மீது அளிக்கப்பட்ட  புகாரை திரும்ப பெறுமாறு புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் எங்களை மிரட்டினார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். AIADMK mla sathya...chennai high court

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர் புகாரின் மீது 4 வார காலத்துக்குள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios