காதலியை திடீரென கரம்பிடித்திருக்கிறார் அதிமுக எம்எல்ஏ ஒருவர்.அவருக்கு பல்வேறு தரப்பினரும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு புகார் வாசிக்கப்பட்டது.இந்தநிலையில் நான் அதிமுகவில் தான் இருக்கிறேன். வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார் எம்எல்ஏ.பிரபு.

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை கரம்பிடித்தார்.கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு . 34 வயதான இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு-வுக்கும் காதலி சௌந்தர்யாவுக்கும் இன்று திடீர் திருமணம் நடைபெற்றது.தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து எம்எல்ஏ பிரபு சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.