சென்னையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநரை இளைஞர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இது தொடர்பாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கார் ஓட்டுநராக சிவகுமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டாஸ்மாக் அருகே செல்லும் போது பாரில் இருந்து வெளியே வந்த இளைஞர் எதிர்பாராத விதமாக சிவகுமார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

இதனால், ஒருவரை ஒருவர் கடுமையாக சாலையிலேயே கடுமையாக தாக்கி கொண்டனர். இதில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.