Asianet News TamilAsianet News Tamil

எங்கப்பா எனக்கு சீட் வாங்கிக் கொடுத்தாரா..? என்னாபா புதுக்கத விடுறீங்க..! அப்பாவை தவிர்க்கும் அ.தி.மு.க. வேட்பாளர்... இழுத்துவிட்டு இம்சிக்கும் தி.மு.க..!

‘பாழும் பழமும் கிடைத்தது போல் மகிழ்ச்சி! பழம் நழுவி பாலில் விழுந்தது போல் சந்தோஷம்! அம்மாவை விமர்சித்த பிரேமலதாவை மறப்போம், மன்னிப்போம் எனும் அடிப்படையில்  விட்டுடுவோம்!’

AIADMK minister jayakumar son
Author
Tamil Nadu, First Published Apr 6, 2019, 11:51 AM IST

‘பாழும் பழமும் கிடைத்தது போல் மகிழ்ச்சி! பழம் நழுவி பாலில் விழுந்தது போல் சந்தோஷம்! அம்மாவை விமர்சித்த பிரேமலதாவை மறப்போம், மன்னிப்போம் எனும் அடிப்படையில்  விட்டுடுவோம்!’

.............தமிழக அரசியலை தெறிக்கவிட்ட மேற்படி டயலாக்குகளின் சொந்தக்காரர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது உலகமறிந்தது. ஆனால் அவரையே அல்லு பறக்க வைத்த விஷயம் என்ன என்பதும் உலகமறிந்ததே. அந்தப் பிரச்னையை அதிரடியாய் கிளப்பிய டி.டி.வி.தினகரனின் வலதுகரமான வெற்றி வேல் ‘எம்.பி.க்கு தம்பி பாப்பா பொறந்திருக்குது’ என்றுதான் முதல் டேக் லைனை கொடுத்தார். அந்த எம்.பி.தான் தென்சென்னை தொகுதியின் எம்.பி.யான ஜெயவர்தன். இப்போது மீண்டும் ஜெயவர்தனே அதே தொகுதியில் ஆளுங்கட்சியின் வேட்பாளராகி இருக்கிறார்.

 AIADMK minister jayakumar son

அடிப்படையில் அப்பா போல் செம்ம சவுண்டு பார்ட்டியாக இல்லாமல், சைலண்ட் அரசியல்வாதியாக இருக்கும் ஜெயவர்தன், என்னமோ தெரியலை, ஏனோ புரியலை அவரது அப்பாவை பெரிதாய் தன் பிரசாரத்தில் சேர்த்துக் கொள்வதில்லை! என்கிறார்கள். ஒரேடியாய் ஒதுக்கி வைத்தால் பிரச்னையாகிவிடும் என்பதால் ஆங்காங்கே அமைச்சரை வந்து தலை காட்ட சொல்லிவிட்டு, மற்றபடி தானே மேனேஜ் செய்கிறார், கூடவே தன் அப்பாவை விட இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.ஸை புகழ்வதிலேயே பெரிதும் குறியாய் இருக்கிறார், தன்னை ஜெயக்குமாரின் மகன் என்பதை விட இவர்கள் இருவரின் ஆதரவாளன் என காட்டிக் கொள்வதையே விரும்புகிறார்! என்கிறார்கள். AIADMK minister jayakumar son

இதற்கு உதாரணமாக....சமீபத்தில் ஜெயவர்தனிடம் ‘உங்க அப்பாவோட சிபாரிசுலதான் உங்களுக்கு மீண்டும் சீட் கிடைத்ததா?’ என்று கேட்கப்பட்டதற்கு, கன்னாபின்னாவென சிரித்து, அந்தக் கேள்வியை காமெடிக்கூத்தாக்கியவர், பின் “ஜெயவர்தன் என எனக்கு பெயர் சூட்டியவரே அம்மாதான். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அம்மாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது, அவங்கதான் என்னை தென்சென்னையில் நிற்க சொன்னாங்க. ஆசியும், வெற்றியும் கொடுத்தது அம்மாதான். AIADMK minister jayakumar son

என்னோட ஐந்தாண்டு கால செயல்பாடை பார்த்துட்டு இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவரும்தான் இப்போ மீண்டும் சீட் கொடுத்திருக்காங்களே தவிர, அப்பா சிபாரிசெல்லாம் கிடையாது. இதென்ன புதுக்கதையா இருக்குது?” என்று அடித்து நொறுக்கியிருக்கிறார் அப்பாவின் இமேஜை. அத்தோடு விடாமல், ‘உங்க அப்பா பற்றிய மீம்ஸை எப்படி எடுத்துக்குவீங்க?’ என்று கேட்டதற்கு “ஜோவியலா எடுத்துக்க வேண்டியதான். நல்ல விஷயம்னா வரவேற்பேன், உள்நோக்கத்தோடு பண்ணியிருந்தால் விட்டுடுவேன்.” என்று தன் அப்பாவின் பெயரையோ, அடையாளத்தையோ குறிப்பிடாமலே தட்டிக் கழித்து பதில் சொல்லியிருகிறார் ஜெயவர்தன். AIADMK minister jayakumar son

அ.தி.மு.க.வின் மவுத்பீஸாகவே ஆகிப்போனவர் ஜெயக்குமார். கட்சி குறித்த நல்லதோ, கெட்டதோ எல்லாவற்றையும் அவரது வாய் மூலமாகதான் கழகமே வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரது மகனோ இப்படி ஜெயக்குமாரை தவிர்க்கவும், தள்ளி வைக்கவும் என்ன காரணம்? என்பதுதான் அக்கட்சியினரின் பெரிய கேள்வி. ஆனால், இதையே புளியங்கொம்பாக பிடித்துக் கொண்ட தி.மு.க., மீண்டும் மீண்டும் இதை சுட்டிக்காட்டி, ‘சொந்த மகனே இவரை மதிப்பதில்லை. ஓட்டுக் கேட்க இவரையும் கூட்டிட்டு போனால் தோல்வி உறுதின்னு பயப்படுறார்.’ என்று  பிரசாரத்தில் ஜெயக்குமாரை வம்புக்கிழுத்து இம்சை கொடுக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios