முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை போன்று அதிமுகவில் இருக்கும் அமைச்சர் ஒருவருக்கு சிபிஐ குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், முதல்வர் எடப்பாடி மற்றும் அதிமுக அமைச்சர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2013-ல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு, மாநில சுகாதாரத் துறை, காவல்துறை உயர் அதிகாரிகளும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிப்பதே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், கடந்த ஆண்டு கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி வருமான வரித்துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ஒரு டைரி சிக்கியது.அந்த டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த டிஜிபி ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இதனையடுத்து. மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிபிஐ அலுவலத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் 3 முறை ஆஜராகி விளக்கமளித்தார். இது தொடர்பான ஊழல் ஃபைல்களை ஏற்கனவே சி.பி.ஐ. பக்காவாகத் தொகுத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகளை அழைத்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சில ரகசிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகையால், டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும் ப.சிதம்பரத்தை போன்று முதல்வருடன் வெளிநாட்டு விசிட்டில் முக்கிய துணையாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.