* தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் இனி ஆளுங்கட்சியை ஆதரிக்க மாட்டார்கள் யாரும். அந்தளவுக்கு வெறுப்பும், கடுப்புமாக இருக்கிறார்கள் ஆட்சி மீது.: தினகரன். (தல, வெறும் இருபது ஓவா நோட்டு கொடுத்ததுக்கே குக்கரை குஜாலா விசிலடிக்க வெச்ச டீமு நம்மோடது. ஒரு லட்சம் கண்டு கண்ணுல காட்டினாங்கன்னு வெய்யி, ச்சும்மா ஸ்ட்ரெயிட்டா எடப்பாடியாரை எம்.பி.யாக்காமலே பிரைம் மினிஸ்டர் ஆக்கிடுவாங்க.)

*  அ.தி.மு.க.வை சேர்ந்த இரண்டு மூத்த அமைச்சர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். ‘தி.மு.க.விடம் ராமதாஸ் பேரம் பேசுகிறார். அவரை நம்ப முடியாது. உன் நிலைப்பாடு என்ன?’ என்று கேட்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. என மூன்று கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது: வேல்முருகன். (அண்ணே நீங்க சொன்ன அந்த ரெண்டு மூத்த அமைச்சரும் ஏ.கே.மூர்த்தியும், வேலுவும் தானே? அவங்களெல்லம் எப்பவோ மத்தியமைச்சர் பதவியில இருந்து இறங்கியாச்சு. நீங்க கண்ணா நல்லா முழிச்சுப் பாருங்கண்ணே விடிஞ்சுடுச்சு.)

* மத வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க அரசு முன் வர வேண்டும்: மு.க. ஸ்டாலின். (க்கும், இஸ்லாமியர் கல்யாண வீட்டுல போயி நின்னுக்கிட்டு இந்து கல்யாணத்தப் பத்தி வரி வரியா உரிச்சு விமர்சனம் பண்ண வேண்டியது. அப்புறம், வெளியில வந்து இப்படி மத நல்லிணக்கம் பத்தி கிளாஸ் எடுக்க வேண்டியது. என்னாங்க சார் உங்க நியாயம்?)

* தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் எங்களுடன் பேசி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் விரைவில் மெகா கூட்டணி அமையும். இதையெல்லாம் நினைத்து ஸ்டாலினுக்கு இப்போதே வயிறு கலங்குகிறது: ஜெயக்குமார். (ஆமா தல. நீங்கதான் பல் துறை வித்தகராச்சே! திறமையான அமைச்சர், நேரமையான சபாநாயகர், அமர்க்களமான பாடகர்...அப்புறம் இத்யாதி இத்யாதி. நீங்களே ஒரு மருந்து சொல்லுங்க பார்ப்போம் அந்த வயிரு கலக்கம் சரியாப்போகட்டும்.) 

* ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை டிசம்பரில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படி, ஊழியர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.: ஜி.கே.வாசன். 
(அரசியல் அரங்குல அனலா அல்லு தெறிச்சுட்டு இருக்குது. ஒவ்வொரு கட்சியோட தலைவரும் யாரு கூட கூட்டணி வைக்கலாம், எப்புடி சீட்டை வாங்கலாம், எங்கே நிக்கலாம், எப்படி ஜெயிக்கலாமுன்னு தெறிச்சுட்டு இருக்காங்க. ஆனா அண்ணனை பாருங்க சகல சவுக்கியமா கிருஷ்ணாயில் ஊத்துறதை பத்தி பேசிக்கினு இருக்காரு.)