மதுரை மாநகர் அதிமுகவை இரண்டாக பிரிப்பதை விரும்பாத அமைச்சர் செல்லூர் ராஜூ, ஓ.பன்னீர் செல்வத்திடம் போர் கொடி உயர்த்தியிருக்கிறார்.மாநகருக்குள் மல்லுக்கட்ட தயாராக இருக்கிறார்கள் அமைச்சர்கள் உதயக்குமார் செல்லூர் ராஜு ஆகியோர் என்கிறன்றனர் அதிமுக நிர்வாகிகள்.


மதுரை மாவட்ட அதிமுக, மாநகரம், புறநகர் கிழக்கு மற்றும் புறநகர் மேற்கு ஆகிய மூன்று மாவட்டங்களாக செயல்படுகிறது.மாநகர மாவட்டச் செயலாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் உள்ளனர்.

எம்.பி தேர்தலுக்கு முன் மாநகர் மற்றும் புறநகர் ஆகிய இரண்டு மாவட்டமாக மதுரை மாவட்ட அதிமுக செயல்பட்டது. ஆனால், மகனுக்கு எம்பி ‘சீட்’ பெறுவதற்காக ராஜன் செல்லப்பா, தன் கட்டுப்பாட்டில் இருந்த புறநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க ஒப்புக்கொண்டார்.மாநகர் அதிமுகவில் மத்திய தொகுதி, மேற்கு தொகுதி, தெற்கு தொகுதி, வடக்கு தொகுதி ஆகியவை உள்ளன. புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளும், புறநகர் மேற்கு மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன. தற்போது மாநகரத்தை புறநகர் போல் 2 ஆக பிரிக்கப்பட உள்ளதாக அக்கட்சியினர் மத்தியில் தகவல் பரவுகிறது.

கடந்த 6 மாதத்திற்கு முன் மாநகரத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தலா 2 தொகுதிகள் வீதம் பிரித்து மாநகரத்தை இரண்டாகப் பிரிக்க அதிமுக தலைமை முன்பு தீவிரமாக இருந்தது. அதன்பின்னணியில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் இருப்பதாகக் கூறப்பட்டது.அதற்கு காரணமே மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் ஆரம்பகாலத்தில் இருந்தே ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர்.ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார்.காலப்போக்கில் ஓபிஎஸ் எடப்பாடியுடன் இணைந்து துணைமுதல்வர் பதவியை வாங்கிக்கொண்டபோது இவர் அதிருப்தியில் தனக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை என்கிற விரக்தியில் அமைச்சர் உதயக்குமார் தீவிர ஆதரவாளராக மாறியிருக்கிறார்.
மாநகரும் தன்னுடைய கோட்டையாக இருக்க வேண்டும் என்று காய்நகர்த்தி வரும் அமைச்சர் உதயக்குமார். எம்எல்ஏ சரவணன் மூலம் அதை நிறைவேற்ற நினைக்கிறார். நகர்பகுதியில் தனிராஜ்ஜியம் நடத்தி வரும் அமைச்சர் செல்லூர் ராஜீக்கு எதிராக களமிறக்கப்படுகிறார் எம்எல்ஏ சரவணன்.மதுரை தெற்கு மதுரை மத்தியதொகுதி இந்த இரண்டு தொகுதிக்கும் மாவட்டச்செயலாளராக சரவணன் எம்எல்ஏ நியமிக்கப்பட இருக்கும் தகவல் தெரிந்து பதறிப்போய் இருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜீ.மதுரை அதிமுக மும்மூர்த்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பதை உடைக்க திட்டமிட்டிருக்கிறது அதிமுக தலைமை.

 தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான சரவணனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை பெற்றுக் கொடுக்க ஆர்பி.உதயகுமார் முதலமைச்சர் கே.பழனிசாமியிடம் தனக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்த மாநகர் அதிமுகவை 2 ஆக பிரிக்க முயற்சித்ததாக கூறப்பட்டது.அதற்கு செல்லூர் கே.ராஜூ எதிர்ப்பு தெரிவித்தால் அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

.