Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரை எடப்பாடியார் சந்தித்தது எதற்காக? அதிமுகவின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய முத்தரசன்.!

தங்களை தற்காத்து கொள்வதற்காகவும் தங்களின் சொத்துகளை பாதுகாக்கவும் அதிமுக தலைவர்கள் இப்போது ஆளுநரை சந்திக்கின்றனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து இருந்தால் பாராட்டி இருக்கலாம். 

AIADMK leaders meet governor to protect property... mutharasan
Author
Salem, First Published Oct 21, 2021, 10:49 AM IST

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது சோதனை நடந்து வருகிறது. தங்களை தற்காத்து கொள்வதற்காகவும் தங்களின் சொத்துகளை பாதுகாக்கவும் அதிமுக தலைவர்கள் இப்போது ஆளுநரை சந்திக்கின்றனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து இருந்தால் பாராட்டி இருக்கலாம். 

இதையும் படிங்க;- எஸ்.பி.வேலுமணி வழக்கை முடித்து வைக்கலாம்.. தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்..!

AIADMK leaders meet governor to protect property... mutharasan

அது மட்டுமல்ல, பொது பிரச்சனைக்காக ஆளுநரை சந்திக்காத முன்னாள் முதல்வர் தங்களை பாதுகாத்திடவே ஆளுநரை சந்திக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர்  மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்.

இதையும் படிங்க;-செருப்பு பிஞ்சிடும்.. அமைச்சர் முன்னிலையிலேயே அரசு ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ.,!

AIADMK leaders meet governor to protect property... mutharasan

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை ஏறக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். ஒன்றிய அரசின் வரி விதிப்பு தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என குற்றம்சாட்டினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற 30ம் தேதி மாநிலம் தழுவிய அளவில்  அனைத்து மாவட்டங்களிலும் கண்டன சைக்கிள் பேரணி நடத்தப்படும் என முத்தரசன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios