Asianet News TamilAsianet News Tamil

கட்சியைக் கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்த முக்கிய கட்சி... குஷியில் முதல்வர் எடப்பாடி..!

இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியைக் கலைத்து விட்டு நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

AIADMK join other party
Author
Tamil Nadu, First Published Jun 18, 2019, 4:07 PM IST

இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியைக் கலைத்து விட்டு நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

 AIADMK join other party

இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் நேற்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியைக் கலைத்துவிட்டு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜவஹர் அலி தலைமையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, பொருளாளர்  யூசுப் அலி, துணைத் தலைவர்களான முஜிபுர் ரஹ்மான், ஜமில் அஹமது, அப்துல் ரிபாயி, நாசர், மாநிலச் செயலாளர்களான அப்ரோஸ் அகமது, அப்துல் சலாம், சிக்கந்தர்,  முனீர், இளைஞர் அணிச் செயலாளர் முகமது அமீன், தொண்டர் அணிச் செயலாளர் இப்ராஹீம், மாணவர் அணிச் செயலாளர் யாசீர் அஹமது, வழக்கறிஞர் அணிச் செயலாளர் சாதிக் அலி, மகளிர் அணிச் செயலாளர் பாத்திமா பீவி, வர்த்தக அணிச் செயலாளர் ஷாஜஹான் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.AIADMK join other party

அதேபோல், அமமுகவில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, ராதாபுரம் ஒன்றியச் செயலாளர் இ. பேச்சிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் கே. முருகன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் ஏ.சி. துரை, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் மகளிர் அணி செயலாளர் மற்றும் எம்.பி.யுமான விஜிலா சத்தியானந்த், திருநெல்வேலி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் பாப்புலர் வி. முத்தையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios