Asianet News TamilAsianet News Tamil

நான் தூதுவிட்டேனா..? முதல்வர் என்ற இருமாப்பில் மாற்றி பேசக்கூடாது.... எடப்பாடிக்கு டி.டி.வி. அணி நிர்வாகி பதிலடி..!

முன்னாள் அமைச்சரும், அமமுகவின் துணைபொதுச் செயலாளருமான பழனியப்பன் அரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ஆனால் நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்பவில்லை. முதல்வர் எடப்பாடி தான், எனக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர். முருகனுக்கும் தூது அனுப்பினார். அவர் ஏதோ அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டோம். முழு பலத்தை அடைந்து விட்டோம் என்ற இருமாப்பில் முதல்வர் என்ற நிலையையும் தாண்டி பேசி வருகிறார்.
 

aiadmk join no Messenger...Former Minister Palaniappan Disclaimer
Author
Tamil Nadu, First Published Nov 16, 2019, 4:54 PM IST

நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்பவில்லை, முதல்வர் பழனிச்சாமி தான் எனக்கு தூது அனுப்பினார் என முன்னாள் அமைச்சரும், அமமுகவின் துணைபொதுச் செயலாளருமான பழனியப்பன் கூறியுள்ளார்.

கடந்த வாரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமமுகவினர் தமிழகம் முழுவதும் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிமுக அல்லது திமுகவில் இணைவதற்கு தூது அனுப்பி கொண்டிருக்கிறார். அவர் வந்தால் நாங்கள் அவரை அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

aiadmk join no Messenger...Former Minister Palaniappan Disclaimer

இந்நிலையில், இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், அமமுகவின் துணைபொதுச் செயலாளருமான பழனியப்பன் அரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ஆனால் நான் எந்தக் கட்சிக்கும் தூது அனுப்பவில்லை. முதல்வர் எடப்பாடி தான், எனக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர். முருகனுக்கும் தூது அனுப்பினார். அவர் ஏதோ அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டோம். முழு பலத்தை அடைந்து விட்டோம் என்ற இருமாப்பில் முதல்வர் என்ற நிலையையும் தாண்டி பேசி வருகிறார்.

aiadmk join no Messenger...Former Minister Palaniappan Disclaimer

மறுபுறம் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அதிமுகவிற்கு பழனியப்பன் வந்தால், அவரை இணைப்பது பற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை செய்து இணைத்துக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி அதிமுகவினர் ஒருவருக்கொருவர் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார்கள். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios