Asianet News Tamil

விழித்துகொள்ளுங்கள் இந்துக்களே.. ஸ்டாலினின் உண்மை முகம் தோலுரிப்பு.. PTR-ஐ பீஸ் தட்டி மாஸ் காட்டிய அதிமுக..!

இந்து மந்திரங்களையும் கடவுளையும் விமர்சித்து பேசிய உங்களின் தலைவரான ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் தாங்கள் இப்படிப்பட்ட அறிவுரைகளை அள்ளி வழங்கலாம் என அதிமுக அதிமுக ஐடி விங் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது.  
 

AIADMK IT wing that skinned Stalin true face
Author
Tamil Nadu, First Published Jul 19, 2020, 11:13 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இந்து மந்திரங்களையும் கடவுளையும் விமர்சித்து பேசிய உங்களின் தலைவரான ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் தாங்கள் இப்படிப்பட்ட அறிவுரைகளை அள்ளி வழங்கலாம் என அதிமுக அதிமுக ஐடி விங் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது.  

தனது ஆன்மீகப்பற்று, குடும்பத்தினரின் கடவுள் நம்பிக்கை, பாரம்பரிய இறைபணி குறித்து எடுத்துக்கூறி அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் நடக்கும் கட்சியில் பொறுப்பு வகித்து வரும் தம்பிகள் ராஜ் சத்யன், சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு...  இருவருக்கும் அண்ணன் என்ற முறையில் நான் அறிவுரை வழங்கியிருந்தார். இதற்கு அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் ராஜ் சத்யன், சிங்கை.ராமசந்திரன் ஆகியோர  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை மற்றும் கோவை தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர்கள் ராஜ் சத்யன், சிங்கை.ராமசந்திரன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்;- பேரறிஞர் அண்ணா அவர்களால் துவங்கப்பட்ட இன்று ஒரு குடும்பத்தில் அசுரப்பிடியில் சிக்கிக்கிடக்கும் கட்சியில் பொறுப்பு வகித்து வரும் அண்ணன் ப.தியாகராஜன் அவர்களுக்கும். அண்ணன் என்றாலும் தம்பிகள் என்றாலும் நெற்றிக்கண்ணே திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற தமிழ் வரலாற்றின் அடிப்படிடையில் தங்களின் அறிவுரைக்கான சரியான பதிலைக் கூறப் கடமைப்பட்டுளோம். நான்கு தலைமுறைகளாக ஆன்மீகப் பாரம்பரியம்மிக்க அரசியல் குடும்பம் தங்களுடையது என்பதை தாங்களே திரும்ப திரும்ப சொல்வதால் அதை தெரியாதவர்கள் இங்கு யாரும் இருக்கமுடியாது.

அப்படிப்பட்ட தாங்கள் அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு கூடாது என்பதால் திமுகவில் இருப்பதாக கூறியுள்ளீர்கள். இது உங்களின் சொந்த முடிவு. திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியில் தாங்கள் ஒரு நிர்வாகி மட்டுமே. நாங்கள் விமர்சிப்பது கேள்வி எழுப்புவதும் திமுகவின் தலைமை என்று சொல்பவரின் பாராட்சமான மதக் கொள்ளைகளைத்தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வழியில் புரட்சித்தலைவர். புரட்சித்தலைவி அம்மா முதல் இன்றைய தலைமை வரை அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்ற வரலாறு தான் எங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை வரலாறு.

ஆனால், வைத்து விட்ட திருநீறை அழித்தவர் உங்களது கட்சித் தலைவர். இந்துமதப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதும் இல்லை. அப்படியே தவறி சொன்னாலும் போட்டதை உடனே அழித்தும் விடுகிறார். அவருடைய தந்தை மு.கருணாநிதியோ இராமர் என்ன இன்ஜினியரா பாலம் கட்ட என்று கேட்டார். நெற்றியில் வைத்த குங்குமத்தை இரத்தமா என்றும் கேட்டார். உங்கள் கட்சித்தலைவரின் சகோதரியும் திமுக எம்.பி.யுமான கனிமொழி திருப்பதி கோவில் மற்றும் திருவல்லிபுத்தூர் ஆண்டாள் பற்றி பேசிய கிண்டல்களையும் கேலிகளையும் எங்கள் வாயால் சொல்லக் கூட விரும்பவில்லை.

இருக்கட்டும், இன்று தமிழ்க்கடவுளான முருகளை இழிவு பேசிக் கைதாகி இருக்கிறார். கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த இந்த செந்தில்வாசன் என்றும் நபர். அவர் இப்படி கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்வதை ஏன் இன்னும் உங்கள் தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை? உங்கள் கண்பார்வையில் தான் அவர் இப்படியொரு கேவலமான செயலை செய்துள்ளார். நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்து மத ஆன்மீகவாதி என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.  

எது உண்மையான மதச்சார்பின்மை

இந்து மதமோ, கிறிஸ்தவமோ, இஸ்லாமிய மதமோ, புத்த சமண சிக்கிய சூஃபி மதங்களோ இப்படி எதுவாக இருந்தாலும் அனைத்தையும் மதித்து நடப்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை. அதன்படி நாங்களும் எங்கள் கட்சியும் எல்லா சமயங்களையும் மதித்து அனைத்து விழாக்களுக்கும் வாழ்த்து சொல்லும் நாகரிகத்துடன் தான் இருக்கிறோம். எனவே தாங்கள் எங்களுக்கு இவ்வளவு மெனக்கெட்டு அறிவுரை கூறவே அவசியம் இல்லை.

எங்களின் கட்சியிலோ தகவல் தொழில்நுட்பப்பிரிவிலோ, யாரும் தனியாக சேனல் வைத்து இப்படி அநாகரிகமாக கடவுளரையும் மத நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நிற்கும் மேடையில் இந்து மந்திரங்களையும் கடவுளையும் விமர்சித்து பேசிய உங்களின் தலைவரான ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் தாங்கள் இப்படிப்பட்ட அறிவுரைகளை அள்ளி வழங்கலாம்.

அதுவும் அவர்களின் வீட்டிற்கே சென்று தாங்கள் எங்களுக்கு தந்த அறிவுரையையும் நாங்கள் அதற்கு அப்போது வழங்கிய பதிவையும் உங்கள் கைகளாலே எடுத்துச் சென்று அவர்களுக்கு தரவேண்டும். அமைதிப் பூங்காவான தமிழகத்தில் வாக்குவங்கிக்காக மக்களிடையே பிரிவினையை உருவாக்குகின்ற சாக்கடைப் புழுக்களாக செயல்படும் அவர்களை அறிவுரை வழங்கித் திருத்துவது பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த உங்களின் கடமையாகும். ஆயிரம் கோயில்களுக்கு நீங்கள் பரம்பரையாக செய்யும் திருப்பணிகளைக் காட்டிலும் அதுவே மேலானது என்பதை தங்களின் தம்பிகளாக அக்கறையுடன் கூற கடமைப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம் என அதிமுக ஐடிவிங் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios