திராவிட மாடலை உருவாக்கியதே நாங்கள் தான் - பழனிசாமி தடாலடி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே நாங்கள் தான் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட போனஸ்களையே முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்.
நடிகர் சூரியின் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்
முதல்வர் ஸ்டாலின் தற்போதும் தனது குடும்பத்தினர் மீதே அக்கறை கொண்டுள்ளார். அதிமுகவில் மட்டுமே தொண்டர்களும் தலைவராகலாம், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. தமிழகத்தை அதிமுக 32 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது. தமிழகம் பல்வேறு துறைகளிலும் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அதிமுக தான் காரணம்.
மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர், ஆனால் தற்போது அக்கட்சி அமைச்சர்களே பெண்களை பார்த்து ஓசி பயணம் என்று ஏளனமாகப் பேசுகின்றனர். இதற்கெல்லாம் தேர்தல் காலத்தில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
மேலும் மூச்சுக்கு 300 முறை திராவிட மாடல் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். ஆனால் திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் என்று தெரிவித்தார்.