ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி 120 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று ஆணைகளை வழங்கினார். சென்னை பல்லாவரத்தில் உள்ள பள்ளியில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணையினை வழங்கும் நிகழ்வில் அமைச்சர் செங்கோடையன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

நர்சரி மற்றும் பிரைமரி 120 பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பள்ளி உரிமையாளர்களிடம் வழங்கினார். இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் :- கிராமங்களில் எங்கெல்லாம் மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லையோ அங்கு 2000 மையங்கள் அமைத்து அதை முதலமைச்சர் இன்று துவங்கி வைக்கிறார்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரி குளங்கள் முன்னெச்சரிக்கையாக சீர் செய்யப்பட்டதால் மழை வெள்ளம் சேதம் இல்லாமல்காப்பற்றப்பட்டிருக்கிறது. 

இந்த கால கட்டத்தில் 98மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இருப்பினும் அனைத்து துறையிலும் தமிழகம் முன்னோடியாக விளங்கி கொண்டிருகிறது. ஒரு புறம் தனியார் பள்ளிகளுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் ஸ்மார்ட் கார்டு வழங்க உத்தரவிடபட்டுள்ளது. இந்தாண்டு தமிழகத்தில்  மொத்தம் 2905 பள்ளிகளுக்கு அங்கிகார ஆணையை வழங்கப்பட்டது. அதிமுகவை பொறுத்த வரை மீண்டும் ஆட்சி அமைக்கும், அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.