அதிமுகவை யாரும் அசைத்து பார்க்க முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அம்பாள்புரம், மச்சுவாடி, மாப்பிள்ளையார் குளம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில், 2ம் கட்ட கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிகழ்ச்சியில் பேசிய விஜயபாஸ்கர்;- கஜா புயல் போன்ற பேரிடர் காலத்திலும் கொரோனோ போன்ற பெருந்தொற்று காலத்திலும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று உதவிகளை செய்து வரும் ஒரே அரசு அதிமுக தான். அதேபோல் அதிமுகவினர்தான் தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதிமுக ,வெயில் என்றால் நிழலாகவும், மழை என்றால் குடையாகவும் இருக்கும் என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். புதுக்கோட்டை மண்ணை ஒருபோதும் தாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியதோடு மக்களுக்காக களத்தில் நின்று பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார். 

மேலும், அதிமுக ஆட்சியில்தான் ஏற்கெனவே புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீரை வழங்கியதும் இந்த அதிமுக அரசு தான் தெரிவித்தார்.