Asianet News Tamil

அப்பாவுக்கு ஆறடி நிலம் தந்தவர்களை துரத்தியடிக்கும் மனநோயாளி... மு.க.ஸ்டாலினை வெறுப்பேற்றும் அ.தி.மு.க..!

அப்பாவுக்கு ஆறடி நிலம் தந்தவர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்று அதிர்ச்சியும் கொடுக்கிறார். மொத்தத்தில் இலவு காத்த கிளியாக தன் அரசியல் போய் விட்டதை நினைத்து ஒரு மனநோயாளி தரத்தில் வசை பாடுகிறார் என நமது அம்மா நாளிதழ் வசைபாடியுள்ளது. 

AIADMK hates MK Stalin
Author
Tamil Nadu, First Published Oct 15, 2019, 2:51 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இலவுகாத்த கிளியின் இயலாமை வெளிப்பாடு என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் வெளியாகி உள்ள கட்டுரையில், ’’முதல்வர் ராஜினிஆம செய்ய வேண்டும் என்கிறாரே ஸ்டாலின். ஐயோ பரிதாபம். இந்த ஆட்சி ஒரு மாதம்  நீடிக்காது, மூணு மாதம் தாண்டாது. ஆறு மாதம் தொடராது என்றெல்லாம்  ஜோசியம் சொல்லி அலைந்தவர் இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒப்பாரி வைக்கும் அளவுக்கு வந்திருக்கிறார். அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் எடப்பாடியார் முதல்வராவதற்காக வாக்களிக்கவில்லை என்று புதியதோர் விளக்கத்தையும் எடுத்து விட்டு புலம்புகிறார். 

மிஸ்டர் சுடலை... 1967ல் பேரறிஞர் அண்ணா முதல்வராவதற்கு வாக்களித்தார்கள் தமிழக மக்கள். ஆனால், இரண்டே ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணா மறைந்து விட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் யாசகத்தால் அண்ணாவுக்கு போட்ட வாக்கில் கருணாநிதி முதலமைச்சரானாரே? அப்போது இனித்ததா? 

ஆனால் இன்று எடப்பாடியார் அரசுக்கு நாளுக்கு நாள் மக்களிடையே பெருகி வரும் பேராதரவு கண்டு மிளகாய் பொடி தின்றவர் கணக்காக எரிச்சலுறும்  எதிர்கட்சி தலைவர் தான் என்ன  பேசுகிறோம் என்பதே புரியாத அளவுக்கு விரக்தி நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.  சுபஸ்ரீயை ரூபசி என்கிறார், அமைச்சர் விஜயபாஸ்கரை ஆளுநர் விஜயபாஸ்கர் என்கிறார். அவரோட அப்பாவுக்கு ஆறடி நிலம் தந்தவர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்று அதிர்ச்சியும் கொடுக்கிறார். மொத்தத்தில் இலவு காத்த கிளியாக தன் அரசியல் போய் விட்டதை நினைத்து ஒரு மனநோயாளி தரத்தில் வசை பாடுகிறார். 


புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பிறகு இந்த அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள்  தொழில் வளர்ச்சிக்கு வித்திரும் அந்நிய முதலீட்டு ஈர்ப்பு , காவேரி உரிமையை வென்றெடுத்தது, நீரோடும் ஆறுகளின் குறுக்கே  தடுப்பணைகள் கட்டுவதற்கு எடுக்கப்படும் தன்னிகரில்லா முயறிக்கள், மின்மிகை மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்திய பெருமை.

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு வாடிவாசல் திறந்து விட்ட வரலாற்று புரட்சி, வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ஆயுரம் ரூபாய் நிவாரணம் வழங்கி  நிம்மதி தந்தது இப்படி இன்னும், இன்னுமாக இந்திய தேசத்திற்கே முன்மாதிரி மாநிலமாக எடப்பாடி- ஓ.பிஎஸ் இணைகரத்து அரசு ஆற்றிவரும் தூய சேவைக்கு தமிழகத்து மக்கள் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளின் வெற்றியை அள்ளித்தந்து அசைக்க முடியாத பெரும்பான்மையை எஃகு மனிதர் எடப்பாடியாருக்கு வழங்கியதன் மூலம் இந்த ஆட்சி நல்லாட்சிக்கு உதாரணம் என்பதை மக்கள் உறுதி செய்து விட்டார்கள். 

மேலும் 2021லும் கழகத்தின் ஹாட்ரிக் வெற்றி சத்தியமாய் நிகழும் என்பதற்கான அத்தனை அறிகுறிகளும் தென்படத் தொடங்கி விட்ட நிலையில் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற ஒரு காமெடி கோரிக்கையை எடுத்து விட்டு தனது ஆற்றாமையை, அரசியல் முதிர்வின்மையை ஸ்டாலின் வெளிப்படுத்தி இருக்கிறார். 

இருக்காதா பின்னே, நாங்குநேரியும், விக்கிரவாண்டியும் கழகத்தின் நல்லாட்சிக்கு வெற்றி சான்றிதழை பரிசாக தருவதற்கு காத்திருப்பது கண்கூடாக தெரிந்து விட்ட காரணத்தால் தரிசாகப்போகிறதே தன் கனவுகள் என்பதை உணர்ந்து தன் நிலை மறந்து உளறுகிறார் ஸ்டாலின். ஐயோ பரிதாபம்...

Follow Us:
Download App:
  • android
  • ios