Asianet News TamilAsianet News Tamil

கட்சியில் உள்ள கோஷ்டி மோதலை தீர்க்க டெல்லி செல்லும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பங்கபடுத்திய கம்யூனிஸ்ட்

கூட்டணி கட்சிகள் எல்லா பிரச்சனைகளிலும் ஒத்த கருத்துடன் இருப்பது இல்லை. ஆனால் பாஜகவை, அதிமுகவை எதிர்க்கும் கொள்கையின் படி ஒன்றிணைந்து செயல்பட்டோம். அந்த வகையில் அரசியல் கனவை மார்சிஸ்ட் கட்சி  நிறைவேற்றி உள்ளது. 

AIADMK has been to go to Delhi to resolve the factional conflict within the party. The Communist party criticized.
Author
Chennai, First Published Jul 26, 2021, 4:33 PM IST

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கடந்த 23 முதல் 25 ஆகிய தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் டி கே ரங்கராஜன் பத்திரிக்கையாள ர்களை சந்தித்தனர், அப்போது கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: கெயில் எரிவாயு திட்டத்தில் மக்களின் வாழ்வாதார பிரச்சனை வரும் போது திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம், அதை அமல்படுத்த கூடாது என வலியுறுத்துவோம் இதில் எந்த சமரசம் இல்லை என்றார்.

AIADMK has been to go to Delhi to resolve the factional conflict within the party. The Communist party criticized.

கூட்டணி கட்சிகள் எல்லா பிரச்சனைகளிலும் ஒத்த கருத்துடன் இருப்பது இல்லை. ஆனால் பாஜகவை, அதிமுகவை எதிர்க்கும் கொள்கையின் படி ஒன்றிணைந்து செயல்பட்டோம். அந்த வகையில் அரசியல் கனவை மார்சிஸ்ட் கட்சி  நிறைவேற்றி உள்ளது. பாஜக அரசு நாள்தோறும் மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அடுத்தடுத்து மோசமான மசோதாக்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. ஒளிப்பதிவு மசோதா, கடல் ஒழுங்காற்று மசோதா, 3 வேளாண் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறது.  ஸ்டான் சுவாமி மரணம் இயற்கையான மரணம் அல்ல, அது ஒரு நிறுவனப் படுகொலை என்றார்.கட்சியில் உள்ள கோஷ்டி பிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலைக்கு அதிமுகவின் நிலைமை சென்றுள்ளது. 

AIADMK has been to go to Delhi to resolve the factional conflict within the party. The Communist party criticized.
அதிமுக எவ்வளவு பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, 2 மாதத்தில் திமுக  அனைத்து திட்டங்களுக்கும் நிறைவேற்ற முடியாது. 10 ஆண்டுகளில் எவ்வளவோ கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றி இருக்கலாம், ஆனால் அக்கட்சி அதனை செய்யவில்லை. திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தும்  தார்மீக உரிமை அதிமுகவுக்கு இல்லை. கியூபா மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க அரசை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து 29 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios