அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்..!

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

AIADMK general committee case.. Supreme Court accepts OPS request..!

அதிமுக பொதுக்குழு வழக்கில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனுத்தாக்கல் செய்தனர். 

இதையும் படிங்க;- விரைவில் அதிமுக பொதுக்குழு.. வாய்ப்பு கிடைத்தால் டிடிவி.யை சந்திப்பேன்.. இபிஎஸ்ஐ அலறவிடும் ஓபிஎஸ்.!

AIADMK general committee case.. Supreme Court accepts OPS request..!

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  செப்டம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது, இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும்போதே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அவசரம் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸ்க்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வம் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு.. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.!

AIADMK general committee case.. Supreme Court accepts OPS request..!

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே ஒத்திவைக்கக்கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஓபிஎஸ் தரப்பு ஒரு வாரத்தில் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும்.

AIADMK general committee case.. Supreme Court accepts OPS request..!

மேலும், வரும் 30ம் தேதிக்குள் அனைத்து தரப்பும் தங்களது வாதங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தற்போது உள்ள நிலையில் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க;- சர்வாதிகாரத்தின் வடிவம் அவர்.. கீழ்த்தரமான பொதுக்குழு.! முதல் முறையாக எடப்பாடியை விளாசிய ஓ.பன்னீர்செல்வம் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios