Asianet News TamilAsianet News Tamil

டிசம்பரில் தான் ஜெயலலிதா பொதுக்குழுவை கூட்டுவார்...! ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டுவார்களா?

ஒவ்வோர் ஆண்டும் நடத்த வேண்டிய பொதுக்குழு கூட்டத்தை இந்த ஆண்டு கூட்டாமலேயே தவிர்த்துவிட்டது அதிமுக. பொதுக்குழு கூட்டத்தை கூட்டாமல் போனதற்கு என்ன காரணம்?

AIADMK general body meeting
Author
Chennai, First Published Dec 30, 2018, 10:07 AM IST

ஒவ்வோர் ஆண்டும் நடத்த வேண்டிய பொதுக்குழு கூட்டத்தை இந்த ஆண்டு கூட்டாமலேயே தவிர்த்துவிட்டது அதிமுக. பொதுக்குழு கூட்டத்தை கூட்டாமல் போனதற்கு என்ன காரணம்?

ஒவ்வோர் ஆண்டிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஒரு முறையாவது பொதுக்குழுவைக் கட்டாயம் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான வழிகாட்டுதல். ஜெயலலிதா இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் டிச.29 அல்லது 30 அன்று செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டிவிடுவார். தேர்தல் நெருங்கிவரும் வேளையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்குக் கூடுதல் முக்கியத்தும் கிடைக்கும். AIADMK general body meeting

பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா பல விஷயங்களைக் குறிப்பிட்டு பேசுவார். தேர்தல் கூட்டணி பற்றி கோடிட்டு காட்டுவார். 2013-ம் ஆண்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்பதை உணர்த்தி பேசினார். அந்த அளவுக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. AIADMK general body meeting

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2016-ம் ஆண்டில் சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்குவதற்காக பொதுக்குழு கூட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். பின்னர் அதிமுகவில் பிளவு, பிறகு இபிஎஸ் - ஓபிஎஸ் இணைப்புக்கு பிறகு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகாலவை நீக்கினார்கள். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் வழக்கம்போல டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. AIADMK general body meeting

ஆனால், கடைசி வாரத்தில்கூட அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. பொதுக்குழுவைக் கூட்ட முடியாமல் போனதற்கு அதிமுக தலைமையிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் சற்று கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கடிதத்தில், கஜா புயல் நிவாரணப் பணிகளை காரணம் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றன. அடுத்தடுத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், நாடாளுமன்றத் தேர்தல் என வர இருப்பதால், அதற்கு முன்பாக பொதுக்குழு கூட்டப்பட்டுவிடும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios