ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அந்தியூர் வேலாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களே முழுவதும் வெற்றி பெற்றனர்.  அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளது.

அந்தியூர் அருகே பருவச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க., மட்டுமின்றி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், தேர்தலில் தீவிரம்  காட்டியது.  தேர்தல் முடிந்து வாக்கு பதிவு முடிந்து ரிசல்ட் வெளியானதில் 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

வெற்றி பெற்ற 11 பேரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக  உள்பட மற்ற கட்சியினர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்தனர். 

இதேபோல், மொடக்குறிச்சி, வேலாண் விற்பனை பொருள் கூட்டுறவு சங்க தேர்தலில் 11 உறுப்பினர்களும் திமுகவினரே வெற்றி பெற்றனர். இங்கும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.